கம்பராமாயணம் 2497 · அயோத்தியா 12.48

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“பூண் இயல் மொய்ம்பினாய்! - அணி அணிந்த தோள்களை உடையவனே!; சேண் உயர் தருமத்தின் தேவை - மிக உயர்ந்த தருமத்தின் தெய்வ வடிவமான; செம்மையின் ஆணியை - நல்லொழுக்கமாகிய செம்மையின் உரைகல்லாக விளங்குகின்ற உத்தம பரதனை; அன்னது - (நீ நினைத்தாற் போல) அப்படித் தவறுபட; நினைக்கல் ஆகுமோ? - கருதலாமா?; ஈண்டுப் போந்தது - (பரதன்) இங்கே வந்தது; எனைக் காணிய - என்னைக் காண்பதற்காக; இது - இக்கருத்தினை; நீ - இலக்குவ நீ! பின்னும் - (அவன் நெருங்கிய) பிறகும்; காண்டி - (அவன்பால் நேரில்) பார்த்து அறிவாயாக.

அறக் கடவுள், செம்மையின் ஆணி பரதன். செம்மை - மனக் கோட்டம் இன்மையாம். நடுவுநிலைமை என்பதாம். எனவே, அரசின்பால் பற்று வைத்து ஒருபாற் கோடும் தன்மை அவனுக்கில்லை என்பதாம். ஆணி என்பதற்கு ‘அச்சாணி’ என உரை தந்து செம்மைத் தேரை நிலைநிறுத்தும் அச்சாணி என்று உரை கோடலும் ஏற்குமேல் கொள்க. பூண் இயல் மொய்ம்பு - அணிகலனாகப் பொருந்திய வலிமை என்றும் ஆம். ஆல் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He is the god of dharma that rises high, the touchstone
  2. of uprightness: can one think such a thing of him?
  3. You whose shoulders bear ornaments! He has come here to see me;
  4. and you will see this for yourself hereafter!'

What the poem says

Irāmaṉ calls Paratan dharma itself in bodily form and the touchstone of uprightness, a mind that never leans to one side. Such a man would never cling to the throne.

Paratan has come only to see his brother, and Ilakkuvaṉ will see it with his own eyes when he arrives. The word rendered 'touchstone' can also mean a linchpin, the pin that holds the chariot of righteousness together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cēṇ uyar tarumattiṉ tēvaic cemmaiyiṉ
āṇiyai, aṉṉatu niṉaikkal ākumō?
pūṇ iyal moympiṉāy! pōntatu īṇṭu eṉaik
kāṇiya; nī itu piṉṉum kāṇṭiyāl! '