கம்பராமாயணம் 2500 · அயோத்தியா 12.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கார்ப் பொரு மேனி அக் கண்ணன் - கருமேகத்தை ஒத்த திரு மேனியை உடைய அவ் இராமன்; (இலக்குவனை நோக்கி) “ஆர்ப்பு உறு - ஆரவாரம் செய்கின்ற, வரி சிலை - கட்டமைந்த வில்லை ஏந்திய; இளைய! ஐய! - தம்பியாகிய இலக்குவனே!; நீ -; பரதன் -; தேர்ப் பெருந் தானையால் சீறிய - தேர்களை உடைய பெரிய சேனையோடு சீற்றம் கொண்டு எடுத்த; பெரும்போர்க் கோலத்தை - பெரிய போர்க்கோலத்தை; பொருத்த நோக்கு - நன்கு பார்ப்பாயாக;” எனா - என்று; காட்டினான் - காண்பித்தான்.
இத்தகைய துன்பத்தோடு வந்துள்ளவனை இவ்வாறு நினைத்தானே என்பது தோன்றக் காட்டினான் என்க. சொற்போக்கு இருப்பினும் இலக்குவனை இராமன் பரிகசித்தான் எனல் இங்குக் கவியின் கருத்துக்கு முரணாகும். முன்னர் ‘என்வயின் நேயநெஞ்சினால் அன்னது நினைத்திலை’ என்று (2418) இராமன் கூறியதாகக் கவிஞர் கூறுதலின், இலக்குவனுடைய ஆர்ப்பரிப்பும், ஐயமும், சீற்றமும் பரதன் இயல்பினை அறியாதாயினும் இராமன்பால் அன்பிற் சிறிதும் குறைந்ததில்லை என்பது பெறுதலின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then he whose body rivals the rain cloud, that Kaṇṇaṉ, pointed him out:
- 'Younger brother, my dear, with your banded bow that roars,
- look well at the great war array in which Paratan
- has come raging with his vast army of chariots!' he said.
What the poem says
Irāmaṉ points to the weeping, worn-out Paratan and tells Ilakkuvaṉ to take a good look at the 'fearsome war array' in which Paratan has come against them.
The words sound like irony, but the commentary holds that Irāmaṉ is not mocking his brother. He has already said that Ilakkuvaṉ's suspicion came from love for him; he simply lets him see for himself how wrong he was about a man who arrives in such grief.