கம்பராமாயணம் 2501 · அயோத்தியா 12.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இவ்வாறு இராமன் பரதனைக் காட்டிக் கூறிய அளவில்) இளவல் - இலக்குவன்; மல் ஒடுங்கிய புயத்தவனை - மற்றொழில் (இவன் தோளின் பெருமையால் உலகில் இல்லாதொழிந்த ஆற்றல் மிக்க தோள் உடைய பரதனை; வைது எழும் - நிந்தனை செய்து கூறிய; சொல்லொடும் - சொற்களோடும்; சினத்தோடும் - அவற்றுக்குக் காரணமாகத் தன் மனத்துண்டாகிய கோபத்தோடும்; உணர்வு - தன் உணர்ச்சிகளும்; சோர்தர - தளர்ந்தொழிய; வில்லொடும் - (தன் கையிற்பிடித்து வில்லோடும், கண்ண நீர் - (சிறந்த பரதனைத் தவறாகக் கருதினோமே என்ற கழிவிரக்கத்தால் ஏற்படும்) கண்ணீரும்; நிலத்து வீழ - பூமியில் விழவும்; எல் ஒடுங்கிய முகத்து - ஒளி குன்றிப் பொலிவழிந்த முகத்துடனே; நின்றனன் - நின்றான்.
மல் ஒடுங்கிய - உலகத்து மல்தொழில் வலிமை எல்லாம் தன்பால் வந்து தங்கிவிட்டது எனினும் அமையும். இனி விரதவொழுக்கத்தால் வலிமை குன்றிய தோள் எனல் ஈண்டுப் பொருந்தாமையும், அரசர்க்கு அங்ஙனம் கூறுவது மரபாகாமையும் உணர்க. பரதன் திறத்துத் தான் நினைந்தன அனைத்தும் பிழைபட்டமையானும், உத்தமனை அதமனாகக் கருதிய அதனால் ஏற்பட்ட மனச்சோர்வும் இலக்குவனை “எல் ஒடுங்கிய முகம்” உடையவனாக ஆக்கியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The younger one stood, the light gone from his face,
- as the words he had hurled against him whose shoulders silenced all wrestlers,
- and his anger, and his very senses ebbed away,
- and his bow, along with his tears, fell to the ground.
What the poem says
Seeing Paratan as he really is, Ilakkuvaṉ is overwhelmed with remorse. His abusive words and his rage drain away, his strength fails, and his bow drops from his hand along with his tears. He stands with the brightness gone from his face, ashamed at having taken the best of men for the worst.
Paratan's shoulders are those in which all the world's wrestling strength has come to rest. Reading them as shoulders weakened by fasting would not suit here, and it is not how a prince is described.