கம்பராமாயணம் 2503 · அயோத்தியா 12.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வந்து - (பரதன் இராமன் அருகில்) வந்து; இறந்தனன் தாதையை - இறந்து போன தந்தையாய தயரதனை; எதிர் - தன் எதிரே; கண்டு என்னவே - மீண்டும் கண்டாற்போல; (இராமனைக் கண்டு) “அறம் தனை நினைந்திலை - அரசு ஏற்றல் அறம்தான் என்பதை நினையவில்லை; அருளை நீத்தனை - இரக்கம் அற்றவனாக ஆயினாய்; முறைமையைத் துறந்தனை” - மூத்தவன் அரசாளுதல் என்கின்ற முறைமையையும் கைவிட்டாய்; என்னும் சொல்லினான் - என்கின்ற சொற்களைக் கூறியவனாய்; மறந்தனன் - தன் உணர்வு கெட்டு; மலர் அடி - (இராமனது) மலர் போன்ற பாதங்களில்; வீழ்ந்தனன் - விழுந்தான்.
அறம் - அரசாளுதல் அரச தர்மம் என்பது. பரதன்பால் காட்டவேண்டிய இரக்கம் - தான் அரசாளாது பரதன் அரசேற்க விரும்பமாட்டான் என்று உணராது அவன்பால் அரசைத் தள்ளிவிட்டு வந்தது இரக்கமின்மையாம். மூத்தவனாகிய தான் அரசாளவேண்டியது முறைமை யாதலின், முறைமையைத் துறந்தனை என்றான். இவ்வளவும் பரதனது ஆற்றாமையைப் புலப்படுத்துவனவாகக் கொள்க. ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You did not think of dharma! You cast off compassion!
- You abandoned the rightful order!' With these words
- he lost himself, and came and fell at those flower-feet,
- as though he were seeing before him his father who had died.
What the poem says
Paratan reaches Irāmaṉ and falls at his feet as if he were seeing their dead father again. Overcome, he reproaches his brother.
It is a king's dharma to rule, and Irāmaṉ has ignored it. It was unkind to push the throne onto Paratan without seeing that he would never want it. And it broke the rightful order by which the eldest son reigns. These reproaches show how unbearable Paratan finds his position.