கம்பராமாயணம் 2504 · அயோத்தியா 12.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ணன் - அருட்கண்ணுடையவனாகிய இராமன்; “உண்டு கொல் உயிர்” என ஒடுங்கினான் - உயிர் உண்டோ இல்லையோ என்று காண்பார் ஐயுறுமாறு மெலிந்து நின்ற பரதனது; உரு - வடிவத்தை; கண்டனன் - பார்த்து; கண் எனும் புண்டரீகம் - (தன்) கண் என்கின்ற தாமரைகள்; பொழி புனல் - இரக்கத்தாற் சொரிகின்ற கண்ணீர்; அவன் சடாமண்டலம் நிறைந்து போய் - அப்பரதனது சடைமுடியிற் போய் நிரம்பி மேற்சென்று; வழிந்து சோர - பெருகி வழிந்தொழுக; நின்றனன் - நின்றான்.
பரதன் உருவ மெலிவு இராமனது உள்ளத்தை உருக்கியது; கண்ணீர் பெருகியது; அதனால் காலில் விழுந்த பரதனது சடைமுடியைக் கண்ணீர் நிறைத்தது. ‘கொல்’ - ஐயம். மண்டலம் - வட்டம், சடாமண்டலம் - வட்டமாகச் சடையைச் சுழித்துக் கட்டுதலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The form of him who had shrunk so that one wondered 'Is there life in him?'
- Kaṇṇaṉ saw, and stood still, and from the lotuses of his eyes
- the waters poured, filling the coil of Paratan's matted
- hair and spilling over and running down.
What the poem says
Irāmaṉ sees how wasted Paratan is, so thin one could doubt he was alive, and is moved to tears. Paratan lies at his feet, and Irāmaṉ's tears pour from his lotus eyes onto his brother's head.
Paratan, like Irāmaṉ, now wears his hair matted and coiled in a round knot like an ascetic. The tears fill that coil and overflow.