கம்பராமாயணம் 2505 · அயோத்தியா 12.56

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் - எல்லா நேர்மைகளுக்கும் ஒப்பற்ற இருப்பிடமாக உள்ள இராமன்; தயாமுதல் - அருள் தெய்வம்; அறத்தினைத் தழீஇயது என்ன - தருமதேவதையைத் தழுவிக்கொண்டாற் போல; அயா உயிர்த்து - பெருமூச்சு விட்டு; அழு கண் நீர் - அழுகின்ற கண்களிலிருந்து வரும் நீர்; மார்பிடை - மார்பிடத்தில்; அருவி உயாவுற - அருவிபோலத் தழுவிப்பெருக; திரு உளம் உருக - உள்ளே அழகிய மனம் கரைந்துருக; புல்லினான் - (பரதனைத்) தழுவினான்.

கருணைக் கடவுள் - இராமன், அறக்கடவுள் - பரதன். இராமன் பரதனைத் தழுவியது கருணை அறத்தைத் தழுவியது போலாகும். அறம் செயற்பாடு - கருணை - பயன்பாடு. காரணமின்றிப் பிறவுயிர் படும் துன்பம் கண்டு பெருகி வரும் இரக்கம் தயாவாகும். இறைவனைத் ‘தயாமூல தன்மம்’ என்பர் அப்பர் (திருநா. 0-20: 6) இங்கே தயாமுதல் எனப்பெற்றது. புறத்தேயும் அகத்தேயும் உருகியது கண்ணீராலும், திருவுளம் உருக அயாவுயிர்த்ததாலும் புலனாயிற்று. ‘ஏ’ காரம் - ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sighing deeply, with a cascade of tears spreading over his breast,
  2. his holy heart melting, he embraced him:
  3. he who has become the single dwelling-place of all that is just,
  4. as if Compassion, the first of things, were embracing Dharma.

What the poem says

Irāmaṉ lifts Paratan and holds him, sighing, his heart melting and his tears running down his chest like a waterfall.

The poet makes the embrace an allegory: Irāmaṉ is compassion, Paratan is dharma, and here compassion embraces righteousness. The commentary notes that the poet-saint Appar called God 'the dharma rooted in compassion'. Irāmaṉ's sighs show his inner grief; his tears show it outwardly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayāvuyirttu, aḻu kaṇīr aruvi mārpiṭai
uyāvuṟa tiruuḷam urukap pulliṉāṉ,
niyāyam attaṉaikkum ōr nilayam āyiṉāṉ,
tayā mutal aṟattiṉait taḻīiyatu eṉṉavē.