கம்பராமாயணம் 2508 · அயோத்தியா 12.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானின் உம்பரான் - விண்ணுலகத்துக்கும் மேல் உள்ள வீட்டிற்கு உரியவனாகிய இராமன்; “விண்ணிடை அடைந்தனன்” என்ற வெய்ய சொல் - தயரதன் விண்ணுலகு அடைந்தான் என்ற கொடிய வார்த்தை; புண்ணிடை அயில் எனச் செவி புகா முனம் - புண்ணில் வேல் சொருகினாற் போலத் தன் காதில் நுழையும் முன்பே; கண்ணொடு மனம் - கண்ணும் மனமும்; சுழல் கறங்கு போல ஆய் - சுழல்கிற காற்றாடி போலச் சுழன்று; மண்ணிடை வீழ்ந்தனன் - பூமியில் விழுந்தான்.
பரதன் கொண்டிருந்த தவ வேடத்தாலும், அவனது வாடிய மேனி வருத்தத்தாலும் புண்ணுற்ற இராமன் மனத்தில் தயரதன் இறந்த செய்தி வேல் இட்டாற் போன்று ஆயிற்று. வானின் உம்பரான் ஆயினும் தான் கொண்ட அவதார வேடத்திற் கேற்பத் துன்பத்திற் கலங்கினன் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cruel words 'He has reached the sky',
- even before they entered his ears like a spear into a wound,
- his eyes and his mind whirled like a spinning pinwheel,
- and he who is above even the heavens fell upon the earth.
What the poem says
Irāmaṉ's heart was already wounded by the sight of Paratan's ascetic dress and wasted body. The news that their father has 'gone to the sky' strikes that wound like a spear, and before the words have fully reached him, his eyes and mind spin and he falls to the ground.
The poet calls him the one above the heavens: though he is the supreme god, he grieves as fully as the human form he has taken requires.