கம்பராமாயணம் 2509 · அயோத்தியா 12.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(இராமன்) இரு நிலம் சேர்ந்தனன் - மண்ணில் விழுந்து; இறை - சிறிதளவும்; உயிர்த்திலன் - மூச்சுவிட்டானில்லை; “உரும் இனை அரவு” என - இடியால் வருந்தும் பாம்பு போல; உணர்வு நீங்கினான் - உணர்ச்சி நீங்கப் பெற்றான்; அருமையின் - மிகச் சிரமமாக; உயிர் - உயிர்ப்பு உளதாக; அயாவுயிர்த்து - பெருமூச்சுவிட்டு; அகம் பொருமினன் - உள்ளே கலங்கி; பல் முறை புலம்பினான் - பலபடியாகச் சொல்லிப் புலம்பலானான்.
இடியேறுண்ட நாகம் போல வருந்தினான் என்றல் வழக்கு. அடியோடு உயிர்ப்பற்ற இராமன் சிறிதளவு அருமையாக உயிர்ப்பு வந்து, ஆற்றாமை நீங்கப் பெருமூச்சு விட்டுப் பின்னர் உள்கலங்கிப் புலம்பினானாம். ‘அரோ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lord fell to the wide earth and did not breathe at all;
- like a snake struck by thunder, he lost his senses;
- then, as breath came back with difficulty, he sighed, and in his heart
- he swelled with grief, and lamented over and over.
What the poem says
Irāmaṉ lies on the ground without breathing, senseless like a snake struck by a thunderbolt, a common image for someone stunned by sudden calamity.
Slowly and with difficulty his breath returns. He heaves a long sigh, and then the grief inside him breaks out in lament. The next verses give his words.