கம்பராமாயணம் 2516 · அயோத்தியா 12.67

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'வண்மையும் , மானமும் , வானவர்க்கும் பேர்க்ககிலாத்
திண்மையும் , செங்கோல் நெறியும் , திறம்பாத
உண்மையும் , எல்லாம் உடனே கொண்டு ஏகினை ஏ !
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் ! '

பொருள் · Meaning in Tamil

“தகை மதிக்கும் - பெருமை உடைய முழு நிலவுக்கும்; தண்மைஇ - குளிர்ச்சியை; ஈந்த - கொடுத்த (கொடுக்கும்படியான; தனிக் குடையோய்! - ஒப்பற்ற வெண்கொற்றக் குடையை உடைய தயரதனே!; வண்மைஇயும் - கொடைத்திறத்தையும்; மானமும் - மானத்தையும்; மேல் வானவர்க்கும் - மேல் உலகில் உள்ள தேவர்களாலும்; பேர்க்ககிலா - மாற்ற முடியாத; திண்மைஇயும் - வலிமையையும்; செங்கோல் நெறியும் - நேர்மையான அரசாட்சி வழியையும்; திறம்பாத உண்மைஇயும் - என்றும் எதனாலும் மாறுபடாத சத்தியத்தையும்; எல்லாம் - கூறப்படாத ஏனைய நல்லியல்புகளையும்; உடனே கொண்டு - உன்னுடனேயே சேர்த்து எடுத்துக்கொண்டு; ஏகினையே - (இறந்து) சென்றுவிட்டாயே.”

இவை அனைத்தும் இனி இவ்வுலகில் தம்மைத் தாங்குவாரைப் பெற்றில்லையாயின என்பதாகும். மானம் - தம் நிலையில் தாழாமையும் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம். உயிரளபெடைகள் ஓசை இன்பம் பயக்க வந்தன. அளபெடை இன்றியும் வரும், இவை கொச்சகக் கலி ஆதலின்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Generosity, and honour, and a firmness that even the gods above
  2. could not shake, and the righteous way of the sceptre, and unswerving
  3. truth: all of these you have taken away with you!
  4. You of the peerless parasol that lent its coolness even to the noble moon!'

What the poem says

Irāmaṉ mourns that his father has taken all his virtues with him: generosity, honour, a firmness not even the gods could move, just rule and unbending truthfulness. No one is left in the world to carry them.

Tacarataṉ's royal white parasol, symbol of his protective rule, was so cooling that it gave coolness even to the full moon. In the original, several words are lengthened with an extra vowel for the sake of the music of the metre.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaṇmaiyum, māṉamum, mēl vāṉavarkkum pērkkakilāt
tiṇmaiyum, ceṅkōl neṟiyum, tiṟampāta
uṇmaiyum, ellām uṭaṉē koṇṭu ēkiṉaiyē!
taṇmai takai matikkum īnta taṉik kuṭaiyōy! '