கம்பராமாயணம் 2518 · அயோத்தியா 12.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பன்ன அரிய - சொல்லுதற்கு அரிய; நோன்பின் - தவத்தை உடைய; பரத்துவனே ஆதி ஆம் - பரத்துவாசன் முதலாக உள்ள; பின்னு சடையோரும் - திரித்துவிட்ட சடையை உடைய முனிவர்களும்; பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும் - ஓர் ஏழு உலகங்களின் அரசர்களும்; மந்திரியர் எல்லாரும் - அமைச்சர்கள் எல்லாரும்; வந்து அடைந்தார் - வந்து சேர்ந்தார்கள்; தன் உரிமைச் சேனைத் தலைவோரும் தாம் அடைந்தார் - சக்கரவர்த்திகளுக்குரிய சேனையின் தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
பரதனுடன் வந்தோர் பலரும் பின்னர் வந்து சேர்ந்தனர் ஆதலின், அவர்கள் எல்லாம் இராமனை நெருங்கினபடியை இதனாற் கூறினார். ‘தாம்’ என்பது உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sages with plaited, matted hair, led by Parattuvaṉ
- of austerities beyond telling, and the kings
- of the seven great worlds, and all the ministers came and gathered;
- and the commanders of his own royal army came as well.
What the poem says
The rest of Paratan's company now reaches Irāmaṉ: the sage Parattuvācaṉ with other ascetics, the kings of all the lands, the ministers and the generals of the royal army. They had followed after Paratan, who went ahead on foot.