கம்பராமாயணம் 2519 · அயோத்தியா 12.70

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மற்றும் - மேலும்; வரற்பாலர் எல்லாரும் - வரவேண்டியவர்கள் எல்லாரும்; வந்து அடைந்து - வந்து சேர்ந்து; சுற்றும் இருந்த அமைதியினில் - இராமனைச் சுற்றி இருந்த பொழுதில்; துன்பு உழக்கும் கொற்றக் குரிசில் முகம் நோக்கி - துன்பத்தில் அழுந்திய வெற்றி நம்பியாகிய இராமனது முகத்தைப் பார்த்து; கோமலரோன் - பெருமையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவன்; பெற்ற - புதல்வன் ஆன; பெருமைத் தவ முனிவன் - பெருமையுடைய தவ முனிவனாகிய வசிட்டன்; பேசுவான் -.

பிரமனது நகத்திற் பிறந்தவன் வசிட்டன் என்னும் பாகவதம். “வதிட்டன் தேற்றினான்” என முன்னர்க் (2441.) கூறியது மரதத இது விரி. இனி விரிவாக வதிட்டன் தேற்றுதலைக் கூறுவார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When all the others who were to come had come and gathered,
  2. and sat around him in stillness, looking at the face
  3. of the victorious prince sunk in grief, the son of the god of the noble flower,
  4. the sage of great penance, began to speak.

What the poem says

When everyone has arrived and settled quietly around Irāmaṉ, Vatiṭṭaṉ speaks. He is the son of Piramaṉ, the creator god who sits on the lotus; one Purāṇa says he was born from Piramaṉ's nail.

The earlier verse said briefly that Vatiṭṭaṉ consoled Irāmaṉ; the following verses give his consolation in full.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟum varaṟpālar ellārum vantu aṭaintu,
cuṟṟum irunta amaitiyiṉil, tuṉpu uḻakkum
koṟṟak kuricil mukam nōkkik kō malarōṉ
peṟṟa perumait tava muṉivaṉ pēcuvāṉ.