கம்பராமாயணம் 2521 · அயோத்தியா 12.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(உயிர்களுக்கு), “உண்மை இல் பிறவிகள் - நிலையில்லாதனவாகிய பிறப்புகள்; உலப்பு இல் கோடிகள் - அளவில்லாத கோடிக் கணக்கானவை; (அவை) தண்மையில் வெம்மையில் தழுவின” - இன்பத்தாலும் துன்பத்தாலும் உண்டாகப்பெற்றவை; எனும் - என்ற; வண்மையை - வளமாக நூல்களில் கூறப்பெற்றவற்றை; நோக்கிய - நன்கு பார்த்து அறிந்தபின்பு; அரிய கூற்றின்பால் - கொடிய யமனிடத்தில்; கண்மையும் உளது என - கண்ணோட்டமும் இருக்கின்றது என்று; கருதல் ஆகுமோ - நினைக்கக்கூடுமோ? (கூடாது)
இன்ப துன்பங்கட்கேற்பப் பல பிறவிகள் எடுக்கும் உயிர்கள் அவை தீர்ந்த பிறகு இறக்கின்றன. இதில் யமன் கண்ணோட்டம் உடையவனாதல் வேண்டும் எனக் கருதல் எற்றுக்கு என்பதாம். கண்மையாவது கண்ணின் தன்மை; அது கண்ணோட்டம். பிறர் துன்பம் கண்டு அவர்மாட்டுக் கண் ஓடியவழிச் செய்யப்படுவது ஆதலின், கண்மை எனப்பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Births without permanence, countless crores of them,
- are bound up with coolness and with heat:
- once one has seen this truth, richly taught, can one think
- that cruel Death has any eye for pity?'
What the poem says
Vatiṭṭaṉ continues his consolation. Every soul passes through countless births, none of them lasting, each shaped by its pleasures and pains, and dies when the fruit of its deeds is used up.
Knowing that, it makes no sense to expect Death to show kindness. The word for 'pity' literally means 'the quality of the eye': the softening of one's look on seeing another's suffering.