கம்பராமாயணம் 2526 · அயோத்தியா 12.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“(உயிர்) இவ் உலகத்தினும் - இம்மைக்கண்ணும், இடருளே கிடந்து - துன்பத்திற் கிடந்து உழன்று; அவ் உலகத்தினும் - மறுமைக் கண்ணும்; நரகின் ஆழ்ந்து - நரகத்தில் அழுந்தித் துன்புற்று; பின் - பிறகு; வெவ்வினை துய்ப்பன - கொடிய வினைப்பயனை அனுபவித்தற் குரியவாய; விரிந்த யோனிகள் - பல்வேறு வகையான பிறவிவகைகள்; எவ் அளவில் செல - எந்தக் கணக்கில் அடங்க; எண்ணல் ஆகுமோ? - எண்ணக் கூடுமோ? (கூடாது என்றபடி)
உயிர் எடுக்கும் பல்வேறு வகையான பிறவிகள் கணக்கில் அடங்காதன. “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்” (திருஞா. தேவா: 1-132.4) என்றார். வினைவழியில் உயிர் இவ்வாறெல்லாம் ஆதலின் அதுபற்றி இரங்கவேண்டா என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Lying in sorrow even in this world,
- and in that other world sunk in hell, and after that
- suffering the fruit of cruel deeds in the many kinds of birth:
- can one even reckon how far they go?'
What the poem says
Souls suffer in this world, sink into hell in the next, and then are born again into countless kinds of bodies to work off the fruit of their evil deeds. The commentary cites a hymn of Tiruñāṉacampantar that speaks of eighty-four hundred thousand kinds of birth.
Since every soul is carried along this way by its deeds, there is no point in grieving over a single death.