கம்பராமாயணம் 2527 · அயோத்தியா 12.78

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

“எண் தகு குணத்தினாய்! - எல்லாராலும் நன்கு மதிக்கப்படுகின்ற குணங்களை உடையவனே!; தாதை என்றலால் - (தயரதன் உனக்குத்) தந்தை என்ற காரணத்தால்; புண்டரீகத் தனி முதற்கும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் ஒப்பற்ற படைத்தற் கடவுளான பிரமனுக்கும்; போக்கு அரு - செல்லுதற்கு அரிய; விண்டுவின் உலகிடை - திருமால் உலகத்தில்; விளங்கினான் - சென்று சேர்ந்து ஒளி பெற்றான்; நீ செய்வது உதவி - மகனாகிய நீ தந்தைக்குச் செய்வதாகிய உதவி; இது அலது உண்டுகொல் - இதுவல்லது இதன்மேல் வேறு உண்டோ? (இல்லை என்றபடி).

நினைக்கப்படுகிற குணங்கள் என்றுமாம். எட்டுக் குணங்கள் என்பாரும் உளர். தந்தையை நற்கதியில் சேர்த்தல் மகன் கடமையாதலின், விண்டு லோகத்தில் தயரதனை விளங்கவைத்தலின் மகனாற் பெறவேண்டியதைத் தயரதன் பெற்றுச் சிறந்தான் என்றார். விளங்குதல் - ஒளியுடல் பெறுதல். பிரமனுக்கும் செல்லமுடியாத விண்டு உலகத்தில் விளங்கினான் என்று கூறினார் எனினும், பின்னர் மீட்சிப்படலத்து, “புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி, அண்ட மூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக!” என்று (10070) தயரதன் கூறுமாறு கொண்டு ஏற்பப் பொருள் செய்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is there any help you could give him beyond this?
  2. You of qualities worth honouring! Because he was your father,
  3. in Viṇṭu's world, which even the peerless first lord of the lotus
  4. can hardly reach, he has come to shine!'

What the poem says

It is a son's duty to help his father to a good state after death. Because Tacarataṉ was Irāmaṉ's father, he has gone to the world of Viṇṭu, Viṣṇu, which even the creator god Piramaṉ cannot easily reach, and shines there in a body of light.

So Irāmaṉ has already done for his father the greatest service a son can do. The commentary notes that a later book has Tacarataṉ say he was seated beside Piramaṉ himself, and the two passages should be read together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''uṇṭukol itu alatu utavi nī ceyvatu?
eṇ taku kuṇattiṉāy! tātai eṉṟalāl,
puṇṭarīkat taṉi mutaṟkum pōkku aru
viṇṭuviṉ ulakiṭai viḷaṅkiṉāṉarō! ''