கம்பராமாயணம் 2528 · அயோத்தியா 12.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“ஐய! - இராமனே; நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை - நீ சிறிதளவும் துன்பப்பட வேண்டா; அவற்கு - அத்தயரதனுக்கு; உய்திறம் - உய்தி பெறும் தன்மை; இதனின் ஊங்கு - இந்த விஷ்ணு லோகத்தை அடைவதைக் காட்டிலும்; இனி உண்டோ? - இனிமேல் வேறு இருக்கிறதோ? (இல்லை) ஆதலின்; செய்வன - (தந்தைக்குச்) செய்யவேண்டுவனவாகிய அந்திமக் கிரியைகளை; வரன்முறை - நூல்களிற் சொல்லிய முறையானே; திருத்தி - ஒழுங்குறச் செய்து; சேந்த நின் கையினால் - சிவந்த நின் கைகளால்; கடன் எலாம் - நீர்க்கடன் எலாம்; ஒழுக்குதி - செலுத்துவாயாக;” என்றான்.
இறந்தோரைக் கருதிச் செய்யும் கிரியைகளின் பலன், பித்ரு தேவதைகளைச் சார்கிறபடியால், உத்தமகதியை அடைந்தவர்களுக்கும் கிரியைகளும், நீர்க்கடன்களும் செய்ய வேண்டுதலின் அவற்றைச் செய்க என்றான் வசிட்டன். நீர்க்கடன் தருப்பணம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Sir, do not grieve over anything at all;
- what better deliverance could there be for him than this?
- Perform in due order the rites that must be done, and with your rosy
- hand pour out all the water offerings owed,' he said.
What the poem says
Vatiṭṭaṉ ends his argument with a practical instruction. Irāmaṉ should stop grieving, since his father could have no better end than the world of Viṣṇu, and instead perform the funeral rites in the proper order and offer the libations of water with his own hand.
Even for those who have reached the highest state, the rites must be done, because their benefit goes to the ancestral spirits.