கம்பராமாயணம் 2534 · அயோத்தியா 12.85

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குரிசில் அச்செம்மல் - குரிசிலாகிய அந்தப் பரதனது; சேந்த கண் - சிவந்த கண்கள்; இந்தியங்களில் - (கண் முதலாகிய) பொறிகளில்; எறிகடல் உண்டு என்ன - அலை வீசுகிற கடல் இருக்கிறது என்று சொல்லும்படி; வெந் துயர் தொடர்தர - கொடிய சோகம் பீடித்தலால்; விம்மி விம்மி -; நீர் - நீரை; உந்திய - வெளிச் செலுத்தின; நிரந்தரம் - எப்பொழுதும்; ஊற்று - பெருகுதல்; மாற்றில - நீங்காதவையாய்; சிந்திய - (நீரைச்) சொரிந்து கொண்டேயிருந்தன.

பூமியிற் கடல்போல இந்திரியங்களிலும் கடல் உண்டு போலும் என்று கண்டார் நினைக்கும்படி இருந்தது பரதன் கண்களில் நீர் பெருகும் தன்மை என்பதாம். இந்திரியம் என்பது ஐம் பொறிகளையும் குறிக்குமேனும் சிறப்பு வகையால் இங்குக் கண்களைமட்டும் கொள்க. ‘ஏ’ ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As cruel grief pursued him, sobbing and sobbing,
  2. pouring out water unceasingly, their springs never stopping,
  3. the reddened eyes of that noble prince shed tears,
  4. as if there were a surging sea within the senses.

What the poem says

Paratan weeps without stopping. His tears pour so steadily that onlookers might think there was an ocean inside the sense organs, just as there is an ocean on the earth.

'The senses' properly means all five, but here it refers to the eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ven tuyar toṭartara, vimmi vimmi, nīr
untiya nirantaram, ūṟṟu māṟṟila
cintiya, kuricil ac cemmal cēnta kaṇ,
intiyaṅkaḷil eṟi kaṭal uṇṭu eṉṉavē.