கம்பராமாயணம் 2538 · அயோத்தியா 12.89

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நவையுள் நீங்கினார் - குற்றங்களிலிருந்து நீங்கியவராகிய; முனிவர் தம் தருமப் பன்னியர் - முனிவர்களுடைய மனைவியர்; ஆயவள் தன்னை - துன்பக் கடலில் தோய்ந்த சீதையை; தாயரின் - தாய்மார்கள் போல; நேர்ந்து - அணுகி; அங்கை ஏந்தினர் - தமது அழகிய கைகளால் அவளைத் தாங்கி அழைத்துச் சென்று; தூய நீர் ஆட்டினர் - தூய்மையான கங்கை நீரிலே முழுக்காட்டி; துயரம் நீக்கினர் - அவள் துக்கத்தைத் தணித்து; நாயகற் சேர்த்தினர் - கொழுநனான இராமனிடத்தில் அடைவித்தார்கள்.

தருமப் பன்னி - தருமபத்தினி - முனிவர்தம் மனைவியர். நாயகன் சேர்த்தித் துயரம் நீக்கினர் எனினும் அமையும். நாயகன் சேர்த்தி நவையுள் நீங்கினார் என நேரே கூட்டி, சீதையை இராமன்பால் சேர்ப்பித்துத் துன்பத்திலிருந்து நீங்கினார் என உரைத்து, தருமபத்தினியர் சீதை படும் துன்பம் பார்த்துத் தாம் படும் துன்பம் நீங்கியதாகப் பொருள்படுத்தலும் பொருந்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming to her, the righteous wives of the sages
  2. held her up in their hands like mothers,
  3. bathed her in pure water, eased her sorrow,
  4. and brought her to her lord: those women free of every fault.

What the poem says

The wives of the hermit sages take care of Cītai like mothers. They support her, bathe her in the river, as was customary after news of a death, soothe her grief and take her back to Irāmaṉ.

The last phrase can also be read to mean that in bringing her to her husband, the women were themselves freed of the pain they had felt at seeing her suffer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyavaḷtaṉṉai nērntu aṅkai ēntiṉar,
tāyariṉ, muṉivartam tarumap paṉṉiyar,
tūya nīr āṭṭiṉar, tuyaram nīkkiṉar,
nāyakaṟ cērttiṉar, navaiyuḷ nīṅkiṉār.