கம்பராமாயணம் 2540 · அயோத்தியா 12.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் - எல்லாவற்றிற்கும் முற்பட்ட நான்முகனாகிய பிரமனுக்கும் முற்பட்டவனாகிய இராமன்; “எந்தை யாண்டையான்? இயம்புவீர்” எனா - என் தந்தை தயரதன் எங்குள்ளான் சொல்லுங்கள் என்று; வந்த தாயர்தம் வயங்கு சேவடி - தன்னை வந்தடைந்த தாய்மார்களது விளங்கிய திருவடிகளில்; சேந்த கண்ணநீர் - சிவந்த தன் கண்களிலிருந்து நீரை; சிந்தி நின்றனன் - சொரிந்து நின்றான்.
திரு உந்தியில் பிரமனைப் பெற்ற திருமாலின் அமிசமானவன் இராமன் ஆதலின், நான்முகத்தவற்கும் முந்தையான் ஆயினன். உலகியலில் இறந்தோரைப் பற்றி விசாரிக்கும் முறை இதுவாகலின் இங்ஙனம் தாயரை இராமன் விசாரித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Where is my father? Tell me!' he cried,
- and on the bright, red feet of the mothers who had come
- he stood shedding the tears of his reddened eyes:
- he who was before even the ancient four-faced god.
What the poem says
Irāmaṉ greets his mothers in the customary way of mourners, asking where his father is, and weeps at their feet.
The poet reminds us that this grieving son is older than Piramaṉ, the four-faced creator, because Irāmaṉ is Viṣṇu, from whose navel Piramaṉ was born.