கம்பராமாயணம் 2550 · அயோத்தியா 12.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“நிறையின் நீங்கிய - கற்பு நெறி விலகிய; மகளிர் நீர்மையும் - பெண்களின் தன்மையும், பொறையின் நீங்கிய தவமும் - பொறுமையினின்று விலகிய தவவொழுக்கமும்; பொங்கு அருள் துறையின் நீங்கிய - விளங்குகின்ற கருணைவழியிலிருந்து விலகிய; அறமும் - தருமமும், தொல்லையோர் - முன்னோர்களது; முறையின் நீங்கிய - முறைமையிலிருந்து விலகிய; அரசின் - அரசாட்சியைக்காட்டிலும்; முந்துமோ - (கொடுமையில்) முற்படுமோ? (முற்படாது என்றபடி)
அரசு முறைமையில் தவறுதல் மற்றவற்றைக் காட்டிலும் பெருங்கேடு பயப்பதென்றான்; பிறவற்றையும் நெறிவழி நிற்கச் செய்வது அரசின் பாற்பட்ட தாதலால். “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் இல்வழி இன்றாம்” (மணி. 22 - 208 - 9.) என்பதை ஈண்டுக் கருதுக. அறத்தின் பயன் அருளே. அருளில்லான் அறம்செய்தல் என்பது நகைப்புக்கிடம் தருவது. “அருளால் அறம் வளரும்” (அறநெறி. 142) என்பதையும் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The ways of women who have strayed from chastity,
- penance that has strayed from patience, and dharma
- that has strayed from the path of overflowing grace: are these worse
- than a kingship that has strayed from the order of the ancestors?'
What the poem says
Paratan argues that a kingdom ruled against the ancient order of succession, with a younger son on the throne while the eldest lives, is worse than an unchaste woman, a penance without patience or a dharma without compassion.
Those other failings harm only themselves, but a king is the one who keeps everyone else on the right path. The commentary quotes the Maṇimēkalai: without a guardian king, neither the penance of ascetics nor the chastity of women survives.