கம்பராமாயணம் 2551 · அயோத்தியா 12.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பிறந்து - (சக்கரவர்த்திக்கு மூத்த மகனாகப்) பிறந்து; நீயுடைப் பிரிவு இல் தொல் பதம் - நீ உரிமையாகப் பெற்றுடை உன்னைப் பிரிதல் இல்லாத பழையதாகிய அரசபதவியை; துறந்து - கைவிட்டு; மாதவம் தொடங்குவாய் என்றால் - நீயே பெரிய தவத்தைச் செய்யத் தொடங்குவாயெனின்; மறந்து - அறிவு கெட்டு; நீதியின் திறம்பி - நீதிக்கு மாறுபட்டு; வாளின் கொன்று - வாளால் கொலை செய்து; அறம் தின்றான் என - அறத்தை அழித்தவன் என்று சொல்லுமாறு; அரசு அது ஆள்வெனோ? - உரிமையில்லாத அரசை ஆள்வேனோ? (ஆளேன் என்றானாம்)
உரிமையும் உறவும் உடைய நீயே அரச பதவி கைவிட்டுத் தவம் செய்வாய் ஆனால், அஃதில்லாத யான் ஆளத் தொடங்குதல் வலிந்து கைப்பற்றி முறை தவறி ஆள்வதாக அன்றோ முடியும் என்றானாம். வாளின் கொன்று - வாளால் மிரட்டி என்னும் பொருளில் வந்துள்ளது. அறம் தின்றல் - தருமத்தை அடியோடழித்துவிடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If you, born to it, cast off the ancient station that is yours
- and can never be parted from you, and take up great penance,
- shall I, forgetting myself, swerving from justice, killing with the sword,
- rule that kingdom, so that men say "He has devoured dharma"?'
What the poem says
Irāmaṉ was born the eldest son, and the throne is his by right. If even he gives it up to live as an ascetic, then Paratan, who has no such right, would be seizing it by force if he ruled.
Men would say he had 'eaten up dharma', destroyed righteousness root and branch. 'Killing with the sword' here means taking power by threat of force.