கம்பராமாயணம் 2559 · அயோத்தியா 12.110

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ ,
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனிதலோ , ஐய ! புதல்வர் ஆதல்தான் ? '

பொருள் · Meaning in Tamil

“ஐய! - பரதனே; தனையர் ஆயினார் - மகனாகப் பிறந்தவர்கள்; புதல்வர் ஆதல்தான் - புதல்வர் என்னும் சிறப்பினைப் பெறுவது; தந்தை தாயரை - தம் தந்தையை, தாயை; வினையின் - தாம்செய்யும் செயல்களால்; நல்லது ஓர் இசையை வேய்தலோ - நல்லதாகிய ஒரு புகழை அடையும்படி செய்தலாலா? (அல்லது); நினையல் ஓவிடா - என்றும் மனத்தை விட்டு நீங்காத; நெடிய வன் பழி புனைதலோ - நீண்டகொடிய பழியை அணிவிப்பதனாலா? எதனால்?

புதல்வர் ஆதல் பெற்றோர்க்கு இசை வேய்தலால்தான் எனின் பெற்றோர் சொல்வழி நின்று செயல் ஆற்றுதலே அதனை உண்டாக்கும்; அவர் சொல்லுக்கு மாறுபடுவது அதனை உண்டாக்காது, பழியை ஆக்கும் என்பதாம். ‘தான்’ உரையசை. பிறப்பால் தனையர் ஆயினும் செயல்சிறப்பால் புதல்வர் ஆவர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'For those born as sons, is it by crowning father and mother
  2. through their deeds with a good name,
  3. or by decking them in a long, harsh disgrace the mind can never let go,
  4. my dear, that they become true sons?'

What the poem says

Irāmaṉ distinguishes being born a son from being a true son. A child becomes worthy of the name by bringing honour to his parents through his deeds, not by loading them with lasting shame.

Honour comes from carrying out one's parents' word; going against it brings only disgrace. If Irāmaṉ took back the kingdom, he would shame his father, who gave his word to Kaikēyi.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taṉaiyar āyiṉār tantai tāyarai
viṉaiyiṉ nallatu ōr icaiyai vēytalō,
niṉaiyal ōviṭā neṭiya vaṉ paḻi
puṉaitalō, aiya! putalvar ātaltāṉ? '