கம்பராமாயணம் 2561 · அயோத்தியா 12.112
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“வரன் - (கைகேயிக்குக் கொடுத்த) வரத்திலே; நில் - நிற்கின்ற; உந்தை சொல் மரபினால் - உன் தந்தையாகிய தயரதன் சொன்ன சொல் முறைப்படி; உடைத்தரணி - அவனுடையதான உலகம்; நின்னது என்று இயைந்த தன்மையால் - பரதனாகிய உன்னுடையது என்று வந்து பொருந்திய தன்மையாலும்; நீ -; உரனின் - வலிமையோடு; பிறந்து - (எனக்கு அடுத்த தம்பியாகப்) பிறந்து; உரிமை ஆதலால் - ஆட்சி உரிமை பெறுதலாலும்; அரசு - அரசாட்சி; நின்னது - நின்னுடையது; ஆள்க - ஆள்வாயாக; என்ன - என்று இராமன் சொல்ல...
இராமன், பரதன் ஆள வேண்டும் என்பதற்கு இங்கு இரண்டு காரணங்கள் கூறினான் எனலாம். வரத்தால் பரதனுக்கு அரசு சேர்ந்தது என்பது ஒன்று, வரத்தால் இராமன் காடு செல்ல அடுத்த தம்பியாகப் பிறத்தலின் ஆட்சியுரிமை இயல்பாகவே அவனை வந்தடைகிறது என்பது மற்றொன்று. ஆகவே, “அரசு நின்னதே ஆள்க” என்றனன். இதனை மறுத்தல் தந்தைக்கும் தாய்க்கும் மாறுபட்டு அறத்தின் வடம் என்பதையும் புலப்படுத்தினான். ‘ஏ’ காரம் தேற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'By the word your father spoke, standing by his boon,
- the earth that was his has come to be yours;
- and since you were born next, with strength, the right is yours;
- the kingdom is yours: rule it!' When he said this...
What the poem says
Irāmaṉ gives Paratan two grounds for ruling. First, by the word their father gave in granting the boon, the kingdom has passed to Paratan. Second, with Irāmaṉ gone to the forest, Paratan is the next brother in line, so the right to rule falls to him naturally.
To refuse would set him against both father and mother. The sentence continues in Paratan's reply.