கம்பராமாயணம் 2565 · அயோத்தியா 12.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“வையகம் - உலகம்; வாய்மை என்னும் ஈது அன்றி - சத்தியம் என்கிற இதுவொன்றில்லாமல்; “தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?” - தூய்மை என்கின்ற ஒன்று தனியே இருப்பதாகச் சொல்லுமா?; தீமைதான் - தீய குணம் என்பது; அதின் தீர்தல் அன்றியே - அந்தச் சத்தியத்தை விட்டு நீங்குதல்தானே அல்லாமல், ஆய் - ஆராய்கின்ற; மெய் ஆக - உண்மையாக; வேறு அறையல் ஆவதே - சத்தியமன்றி வேறு ஒன்றைச் சொல்ல இயலுமா? (இயலாது என்றபடி.)
“வாய்மையே தூய்மையாம்; வாய்மைதவிரத் தூய்மை தனிவேறில்லை, தீமை என்பது வாய்மையின் தவறுவதே அன்றி வேறன்று; சத்தியத்துக்கு இணையாக, மாற்றாக வேறொன்றைச் சொல்ல இயலாது. ஆகவே, தந்தையார் உரையை, சத்தியத்தைக் காப்பதுதான் என்க தூய்மையாகும். வேறு இல்லை” என்றான் இராமன். “புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்” (குறள். 298) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Apart from this thing called truth, does the world
- speak of anything else that is truly purity?
- Evil is nothing but turning away from it; apart from this,
- if one examines it honestly, can anything else be named?'
What the poem says
Irāmaṉ says that truthfulness is purity itself; there is no separate purity apart from it, and evil is simply falling away from truth. Nothing can be set beside it or in its place.
So keeping their father's word is the only pure course. The commentary cites the Tirukkuṟaḷ: outward purity comes from water, inner purity is seen in truthfulness.