கம்பராமாயணம் 2576 · அயோத்தியா 12.127

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சான்றவர் ஆக , தன் குரவர் ஆக , தாய்
போன்றவர் ஆக , பொன் புதல்வர் ஆக தான் ,
தேன் தரு மலர் உளான் சிறுவ ! செய்வென் என்று
ஏன்றபின் , அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ? '

பொருள் · Meaning in Tamil

“தேன் தரு மலருளான் சிறுவ! - தேனைத் தருகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனின் புதல்வ!; சான்றவர் ஆக - பெரியோர்களே ஆகுக; தன் குரவர் ஆக - தன் ஆசிரியரே ஆகுக; தாய் போன்றவர் ஆகுக - தாய் முதலியவரே ஆகுக, மெய்ப்புதல்வர் ஆக - சத்தியத்திற் பிறழாத தன் புதல்வர்களே ஆகுக; தான் - ஒருவன்; “செய்வேன்” என்று ஏன்றபின் - (இவர்களிடத்தில்) செய்வேன் என்று சம்மதித்த பின்; அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? - அந்த வார்த்தை முடியாது என்று மறுக்கத்தக்க தன்மையுடையதோ? (அன்று என்றபடி)

தாய் போன்றவர் எனவே தந்தை, தம்முன், அரசன் முதலிய நான்கு குரவர்களைக் குறிப்பிடாராயிற்று. ஒருவரிடம் ஒப்புக்கொண்டால் செய்தே ஆகவேண்டும், சத்தியம் பிறழ்தல் கூடாது என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Whether it be the wise, or one's own teachers, or those
  2. like one's mother, or one's own true sons,
  3. son of the god in the honey-giving flower, once a man has said "I will do it"
  4. and agreed, is that word something he can take back?'

What the poem says

Irāmaṉ answers Vaciṭṭaṉ, who is himself a son of Piramaṉ. It does not matter whom a promise was made to: elders, teachers, mother and the like, or even one's own sons. Once a man has said 'I will do it', he cannot go back on his word.

'Those like one's mother' stands for the whole group of elders: father, elder brother, king and the rest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cāṉṟavar āka, taṉ kuravar āka, tāy
pōṉṟavar āka, meyp putalvar āka tāṉ,
tēṉ taru malaruḷāṉ ciṟuva! ceyveṉ eṉṟu
ēṉṟapiṉ, av urai maṟukkum īṭṭatō? '