கம்பராமாயணம் 2581 · அயோத்தியா 12.132

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

“ஏத்த அரும் - புகழ்தற்கு அரிய; பெருங் குணத்து இராமன் - பெரிய குணங்களை உடைய இராமன்; தாதை சொல் - தந்தையின் வார்த்தையை; புரக்கும் - காப்பாற்றுகிற, பூட்சியான் - மேற்கோளுடையவன்; இவ்வழி போத்தரும் - இக்காட்டிடத்தே செல்வான்; ஆத்த ஆண்டு - (தந்தையால்) நியமிக்கப்பட்ட ஆண்டுகள்; ஏழினோடு ஏழும் - பதினான்கும்; அந்நிலம் - அவ்வரசை; காத்தல் - காப்பாற்றுதல்; உன் கடன் - உன் முறையாகும்; இவை கடமை” - இவை, இருவராலும் தவறாது நிறைவேற்றி வைக்கப்பட்டவேண்டியவை, என்றனர் - என்று சொன்னார்கள்.

போத்து அரும் எனப் பிரித்து, பொத்து எனக் குறுக்கமாக்கி, மனக்குற்றம் எனப் பொருள் தந்து, ‘மனக் குற்றமில்லாத தயரதன் சொல்லை’ எனக் கூட்டிப் பொருள் செய்தலும் ஒன்று. இனி, போற்று அரும் என்பது எதுகை நோக்கிப் ‘போத்தரும்’ என நின்றதாகக் கொண்டு, போற்றுதற்கரிய தந்தை எனினும் ஆம். யாத்த - கட்டப்பட்ட என்பது ஆத்த என நின்றது முதற்குறை. நிறைவேற்றியே தீர வேண்டியது கடமை எனப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Irāmaṉ, of great virtues beyond all praise, shall go this way,
  2. for he is pledged to guard his faultless father's word;
  3. for the years that were fixed, seven and seven, that land
  4. it is your part to guard; these are binding duties,' they said.

What the poem says

The gods speak from the sky to Paratan. Irāmaṉ, whose virtues are beyond praise, is bound to keep his father's word and must go on into the forest. For the fourteen years laid down, Paratan's duty is to protect the kingdom. Both are obligations that must be carried out.

The commentary offers several readings of one word in the second line: it may describe the father as faultless or as worthy of praise, or it may mean that Irāmaṉ 'will go' this way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ētta arum peruṅ kuṇattu irāmaṉ iv vaḻip
pōttu arum tātai col purakkum pūṭciyāṉ
ātta āṇṭu ēḻiṉōṭu ēḻum an nilam
kāttal uṉ kaṭaṉ; ivai kaṭamai ' eṉṟaṉar.