கம்பராமாயணம் 2582 · அயோத்தியா 12.133

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

வானவர் உரைத்தலும் - தேவர் இவ்வாறு கூறிய வளவிலே; “மறுக்கற்பாலது அன்று - (தேவர்கள்) உரை மறுக்கும் தன்மை உடையது அன்று; யான் உனை இரந்தனென் - நான் உன்னை வேண்டிக்கொண்டேன்; இனி -; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆனது ஓர் அமைதியின் - (உனக்குப்) பொருந்தியதான ஒரு தகுதிமுறைமையின்; பார் அளித்தி - இவ்வுலகைக் காப்பாற்றுக; எனா - என்று சொல்லி; தான் - இராமன்; அவன் - அப்பரதனது; துணை மலர்த் தடக்கை - இரண்டு தாமரை மலர் போன்ற பெரிய கைகளை; பற்றினான் - பிடித்துக்கொண்டான்.

வானவர் உரையும் உள்ளது; யானும் ஆணையிடுகிறேன்; நீ அரசு புரிக என்று இராமன் பரதனை வேண்டினான். பெரியவன் ஆதலாற் கைகளைப் பற்றிக்கொண்டான். “ஆனது ஓர் அமைதியின்” என்பதற்கு நான் காட்டில் உறைவதற்கு நியமித்த காலம் வரை எனப் பொருள் கோடலும் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the gods had spoken: 'This is not to be refused;
  2. I have begged you; now, by my command,
  3. in the way that has been settled, protect the earth,' he said,
  4. and took in his own both his brother's great, flower-like hands.

What the poem says

With the gods' words to back him, Irāmaṉ presses Paratan again. What the gods have said cannot be refused, and Irāmaṉ both begs and commands him to protect the kingdom in the way that has been arranged, or, on another reading, for the period Irāmaṉ must spend in the forest.

As the elder brother, he takes both of Paratan's hands in his own as he says it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉavar uraittalum, 'maṟukkaṟ pālatu aṉṟu;
yāṉ uṉai irantaṉeṉ, iṉi eṉ āṇaiyāl
āṉatu ōr amaitiyiṉ aḷitti pār ' eṉā,
tāṉ avaṉ tuṇai malart taṭak kai paṟṟiṉāṉ.