கம்பராமாயணம் 2585 · அயோத்தியா 12.136
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பரதனும் -; வேறு செய்வது ஒன்று இன்மையின் - வேறு செய்யக் கூடியது ஒன்றும் இல்லாதமையால்; “அரிது” என எண்ணி - (இராமனைப் பிரிந்து இருத்தல்) இயலாது என்று கருதி; விம்மினன் ஏங்குவான் - அழுது இளைத்து; “திருவடித்தலம் செம்மையின் தந்தீக” என - உன் திருவடிநிலைகள் இரண்டையும் செப்பமாக எனக்கு அளித்தருளுக எனக் கேட்க; (இராமனும்) எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் - எல்லா உலக இன்பங்களையும் தருவனவாகிய தன் இரண்டு திருவடி நிலைகளையும் கொடுத்தருளினான்.
இம்மை, மறுமை என்றாற் போல எம்மை என்பதற்கு எப்பிறவியினும் (எல்லா வின்பங்களும் தருவன) எனப் பொருள் உரைத்தலும் ஒன்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Paratan too sobbed, and since there was nothing else
- left to do, thinking it too hard to bear, he grieved,
- and said, 'Graciously give me your sandals'; and
- the two that grant every world's blessings he gave him.
What the poem says
With nothing more he can do, and unable to bear being parted from Irāmaṉ, Paratan sobs and asks for one thing: Irāmaṉ's sandals.
Irāmaṉ gives him the pair. The poet calls them the sandals that grant every blessing, in every world or, on another reading, in every birth.