கம்பராமாயணம் 2591 · அயோத்தியா 12.142
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் - (இராமன் சித்திரகூட பருவதத்தில் உள்ளான் என்பதை அறிந்தபடியால்); நின்றவர் - (அயோத்தி நகரத்தில்) இருக்கின்றவர்கள்; நேயத்தால் - அன்பினால்; நலிவர் - (அடிக்கடி வந்து) வருத்துவர்; எனா - என்று கருதி; (இராமன்) தானும் -; தன் துணைத் தம்பியும் - தன்னைப் பிரியாத இலக்குவனும்; தையலும் - சீதையும்; (ஆகியோருடன்) தென்திசையில் நெறியினை - தென்திசையில் உள்ள வழியின்கண்; சேறல் மேயினான் - நடந்து செல்லுதலைப் பொருந்தினான்.
அனைவரும் அறிந்த இச்சித்திரகூட பருவதத்தே இருந்தால், மீண்டும் மீண்டும் அவர்கள் அடிக்கடி வந்து அன்பால் தொல்லை கொடுப்பர் என்பது கருதி இராமன் சித்திரகூட மலைக்குத் தெற்கே காட்டின் உள்ளே ஊடுருவிச் சென்று சேய்மையில் தங்கித் தவம் இயற்ற விரும்பித் தென்திசை வழிக்கொண்டான் என்றார். ‘தம்பியும் தானும் தையலும்’ என்று எண்ணி, மேயினான் என்று ஒரு முடிபு பெற்றது. “தானும் தேரும் பாகனும் வந்து என் நலனுண்டான்” என்றாற் போலத் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தன ஆவதோர் முறைபற்றி வந்தன எனச் சேனாவரையர் (தொல். சொல். கிளவி. 51) கூறுமாறுபற்றி உணர்க. “தானும் தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்” என்பதும் (திருவா. திருக்கோக. 15) அதுவே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Because it is known that I live on this hill,
- those who stay behind will trouble me out of love,' he said,
- and with his companion brother, himself and the lady,
- he set out along the road to the south.
What the poem says
This last verse of the chapter turns the story toward the forest books. Now that everyone knows Irāmaṉ is living on the hill of Cittirakūṭam, he expects people from Ayōttī to keep visiting him out of affection and disturbing his life of penance.
So he leaves with Ilakkuvaṉ and Cītai and heads south, deeper into the forest. The verb is singular, agreeing with Irāmaṉ as the chief of the three, a usage the grammarians allow.