கம்பராமாயணம் 2593 · ஆரணிய 1.2

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன்
கைக் குறுங்கண் மலை போல் குமரர் , காமம் முதல் ஆம்
முக்குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனைப்
புக்கு இறைஞ்சினர் ; அருந்தவனும் வந்து புகலும் .

பொருள் · Meaning in Tamil

திக்கு உறும் - எட்டுத் திசைகளிலும் பொருந்திய; செறிபரம்-மிகுந்த சுமையை; தெரிய நின்ற - இவ்வளவு என அறியுமாறு தாங்கி நின்ற, திரள் பொன்கை - திரண்ட அழகிய துதிக்கையையும், குறுங்கண் - சிறிய கண்களையும் உடைய; மலைபோல் குமரர் - யானைகள் போன்ற இராமலக்குவர்; புக்கு - அம்முனிவர் உறையுள் புகுந்து; காமம் முதல் ஆம் முக்குறும்பு அற எறிந்த - காமம், வெகுளி, மயக்கம் எனும் மூன்று குற்றங்களையும் அடியோடு கடிந்த; வால் வினை முனிவனை -தவவினை உடைய தூய்மையான செயல்களை உடைய அத்திரி முனிவனை; இறைஞ்சினர் - வணங்கினார்கள்; அருந்தவன் - அம்முனிவன்; உவந்து புகலும் - மனமகிழ்ந்து சொல்வான்.

திக்குறு மலை என்பது எட்டுத் திசைகளிலுள்ள யானைகள். முக்குறும்பு - காமம் வெகுளி மயக்கம். (குறள் 360). அம்மூன்று குற்றங்கள் இல்லாதவன். அத்ரி-அத்திரி, மலை-ஆகுபெயர் புகலும்-செய்யும் என்னும் முற்று ஆண்பாலுக்கு வந்தது.

வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் (இராமானுச நூற்றந்தாதி).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the elephants that stand at the quarters bearing, for all to see, the dense weight laid there, with thick and handsome
  2. trunks and small eyes, the two princes, to the sage of pure deeds who had utterly cast out
  3. the three evils that begin with desire,
  4. went in and bowed; and the great ascetic, rejoicing, spoke.

What the poem says

Irāmaṉ, Ilakkuvaṉ and Cītai have left Citrakūṭam and come to the hermitage of the sage Attiri at the start of the forest book. The princes, compared to the great elephants that hold up the eight quarters of the world, go in and bow to him.

The sage is praised as one who has rooted out the three faults of the mind, desire, anger and delusion, the classic triad also named in the Tirukkuṟaḷ. Pleased by their visit, he begins to speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tikku uṟum ceṟi param teriya niṉṟa tiraḷ poṉ
kaik kuṟuṅ kaṇ malaipōl kumarar, kāmam mutal ām
muk kuṟumpu aṟa eṟinta viṉai vāl muṉivaṉaip
pukku iṟaiñciṉar; arun tavaṉ uvantu pukalum.