கம்பராமாயணம் 2594 · ஆரணிய 1.3

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
பாட வேறுபாடு · Project Madurai reads
1''குமரர் ! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ ?
அமரர் யாவரொடும் எவ் உலகும் வந்த அளவோ ?
எமரின் யார் தவம் முயன்றனர்கள் ? '' என்று உருகினன் ,
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் .

பொருள் · Meaning in Tamil

தமர் எலாம் வர உவந்தனைய - தம் சுற்றத்தார் யாவரும் வர அது கண்டு மகிழ்ந்தாற் போல; தன்மை முனிவன் - மகிழ்ச்சி நிலை அடைந்த அத்திரி முனிவர்; (இராமலக்குவரைக் கண்டு); “குமரர்! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை - தயரதன் மக்காள்! நீங்கள் இவ் விடத்தில் வந்து பெரும்பேறடைய அருளிய (நீங்கள் இங்கு வந்தது) தன்மை; எளிதோ- (எங்களுக்கு) கிடைத்தற்கு எளியதோ?; அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்த அளவே - எல்லாத் தேவர்களோடும் எல்லா உலகங்களும் வந்த தன்மையதே!; எமரின் - எங்களைவிட; யார் தவம் முயன்றவர்கள்- யாரே தவ முயற்சியில் ஈடுபட்டவர்கள்?; என்று உருகினன் - என்று கூறி மனம் உருகினான்.

சுற்றம் சூழ இருப்பது உலகினர்க்குப் பெருமகிழ்வூட்டும். எனவே தமரெலாம் வர உவந்தனைய என்றார். எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்பதற்கு இவ்வரும்பேறு பெற்ற எம்போல் நல்வினைசெய்தார் யார் என்றுமாம். அமரர் - சாவில்லாதவர். தாம்தேடி அடைய வேண்டியவன் தன்னை நாடி வந்ததால் உவப்பு மிகுந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Princes! Is this grace, your coming here, an easy thing to gain?
  2. It is as if all the gods and every world had come!
  3. Who among men has laboured at penance more than we?' So he melted with feeling,
  4. the sage, glad as one to whom all his kin had come.

What the poem says

Attiri greets Irāmaṉ and Ilakkuvaṉ. Their visit, he says, is a blessing not easily won; it is as though the gods and all the worlds had arrived together, and no one's penance has borne richer fruit than his.

The poet compares the old sage's joy to that of a man surrounded by his whole family. The deeper point is that the one whom ascetics labour to reach has come of his own accord to the ascetic's door.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''kumarar! nīr ivaṇ aṭaintu utavu koḷkai eḷitō?
amarar yāvaroṭum ev ulakum vanta aḷavē?
emariṉ yār tavam muyaṉṟavarkaḷ? '' eṉṟu urukiṉaṉ,
tamar elām vara uvantaṉaiya taṉmai muṉivaṉ.