கம்பராமாயணம் 2595 · ஆரணிய 1.4

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து , அவன் அரும்
பன்னி , கற்பின் அனசூயை பணியால் , அணிகலன் ,
துன்னு தூசினொடு , சந்து , இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி , அவர் தண்டகவனம் புகுதலும் .

பொருள் · Meaning in Tamil

அன்ன மா முனியொடு - அந்த மாட்சிமை பெற்ற முனிவருடன்; அன்று - அன்றைய பொழுது; அவண் உறைந்து - (இராமலக்குவ சீதை ஆகியோர் அவ்வுறையுளில் தங்கியிருந்து; அவன் அரும் பன்னி - அம்முனிவனின் அரிய சிறப்புடைய மனைவியாம்; கற்பின் அனசூயை - கற்பிற் சிறந்த அனசூயை என்பவளின்; பணியால் - கட்டளைப்படி; அணிகலன் - அழகிய நகைகளும்; துன்னுதூசினொடு -பொருந்திய ஆடைகளும்; சந்து - சந்தனமும்; இவை - ஆகிய இவற்றை; சுமந்த - தாங்கி ஏற்ற; சனகன் பொன்னொடு - சனகன் மகளாம் சீதையுடன்; ஏக - அவ்விடம் விட்டுச் சென்று; உயர் தண்டக வனம் புகுதலும் -சிறந்த தண்ட காரணியத்தில் புகுந்தவுடன்.

பன்னி - பத்தினி அனசூயை - அழுக்காறில்லாதவள், அணிகலன்கள் சீதை அழகை மிகுவிக்காது அதனை மறைத்தலின் சுமந்த என்றார் பொன் - திருமகள்; ஆகுபெயர். தண்டகவனம் தண்டகன் என்னும் மன்னனால் பெயர் பெற்றது அவன் சூரிய குலத்தில் இட்சுவாகு மன்னனின் நூறு மக்களில் கடைப்பட்ட மூடன் எனக் கொண்டு தண்டன் எனப் பெயரிடப் பெற்றவன். விந்தமலைக்கும் சைவலமலைக்கும் இடைப்பட்ட நிலத்தை மது மந்தம் எனும் தலைநகரைக் கொண்டு ஆண்டான். ஒருநாள் சுக்கிராச்சாரி ஆசிரமத்துள் அவர்மகளாம் அரசையைக் கற்பழித்தான். எனவே ஆச்சாரியரின் சாபத்தால் அவன் குடும்பம், சேனை, நாடு ஆகியவை மண் மாரியால் அழிந்தன. பின்பு அந்த இடம் காடாகித் தண்டகாரணியம் எனப் பெயர் பெற்றது. அணி பறித்து அழகு செய்தார் (6991).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Staying there that day with that great sage, at the bidding of his rare
  2. wife, Aṉacūyai of chaste virtue, with ornaments,
  3. close-woven garments and sandal paste, these borne by Caṉakaṉ's
  4. golden one, they went on; and as they entered the lofty Taṇṭaka forest,

What the poem says

The three spend a day at Attiri's hermitage. His wife Aṉacūyai, famed for her chastity, gives Cītai jewels, clothes and sandal paste, which she carries as she leaves; the word 'bore' hints that the ornaments only hide a beauty they cannot add to. Cītai is called 'Caṉakaṉ's golden one', that is, his daughter and the goddess Tirumakaḷ.

They now enter the Taṇṭaka forest. Tradition says it was once the kingdom of Taṇṭaṉ, a foolish son of Ikṣvāku, which was laid waste by a rain of dust after he violated the daughter of the sage Cukkiraṉ. The sentence continues into the next verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa mā muṉiyoṭu aṉṟu avaṇ uṟaintu, avaṉ arum
paṉṉi, kaṟpiṉ aṉacūyai paṇiyāl, aṇikalaṉ,
tuṉṉu tūciṉoṭu, cantu, ivai cumanta caṉakaṉ
poṉṉoṭu ēka, uyar taṇṭaka vaṉam pukutalum.