கம்பராமாயணம் 2596 · ஆரணிய 1.5

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எட்டொடு எட்டு மத மா கரி , இரட்டி அரிமா ,
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு , வலியின்
கிட்டவிட்டு இடை கிடந்தன , செறிந்த ஒருகைத்
தொட்ட முத்தலை அயில் தொழில் மிடல் கழுவொடே .

பொருள் · Meaning in Tamil

எட்டொடு எட்டு - பதினாறு; மதமாகரி - மதங்கொண்ட பெரிய யானைகள்; இரட்டி அரிமா- அவற்றிற்கு இருமடங்காம் முப்பத்திரண்டு சிங்கங்கள்; வட்டவெங்கண் - வட்டமான கொடிய கண்களையுடைய; வரை ஆளி பதினாறு - மலையில் வாழும் பதினாறு யாளிகள்; வகையின் - தன் வகைமையால்; கிட்ட இட்டு - நெருங்கக் கோத்திட்டு;இடைகிடந்தன - இடையே நெருங்கிக் கிடந்தனவாக; செறிந்தது ஒருகைத் தொட்ட - திரண்டதான தன் ஒரு கையால் பிடித்த; முத்தலை அயில் தொகை - மூன்று தலைகளையுடைய மிக்க கூர்மையுடன் கூடிய; மிடல் கழுவொடு - வலிமைமிக்க சூலாயுதத்துடன், ஏ-அசை.

விராதன் உண்ண யானை முதலியவற்றைத் தன் சூலத்திற் கோத்து எளிதிற் பிடித்திருந்தான். எட்டொடு எட்டு என்பதை அறுபத்து நான்கு என்பர் சிலர். தொட்ட - பெரிய எனும் பொருள் தரும் திசைச் சொல்லுமாம், ஆளி என்பது உறுப்புகளால் யானையும் சிங்கமும் சேர்ந்து சிறகும் கொண்டு காணப் பெறும் விலங்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sixteen great rutting elephants, twice as many lions,
  2. sixteen mountain yāḷis with round and cruel eyes, each after its kind
  3. skewered close, lay packed along it: with the mighty three-pronged, keen-pointed
  4. impaling spear held in his one massive hand,

What the poem says

The demon Virātaṉ appears, and the poet describes him over several linked verses. In his hand he carries a three-pointed spear on which he has spitted his food: sixteen elephants, thirty-two lions and sixteen yāḷis, the mythical beasts that combine the features of elephant and lion and have wings.

The point is the ease of his strength; he holds this load in a single hand. Some read 'eight with eight' as sixty-four rather than sixteen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṭṭoṭu eṭṭu mata mā kari, iraṭṭi arimā,
vaṭṭa veṅ kaṇ varai āḷi patiṉāṟu, vakaiyiṉ
kiṭṭa iṭṭu iṭai kiṭantaṉa, ceṟintatu orukait
toṭṭa mut talai ayil tokai miṭal kaḻuvoṭē.