கம்பராமாயணம் 2597 · ஆரணிய 1.6

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செஞ்சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன் ,
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என , மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில்
பஞ்சு பட்டது படப் படியின்மேல் முடுகியே .

பொருள் · Meaning in Tamil

செஞ்சுடர் - சிவந்த ஒளியுடைய; செறிமயிர்ச் சுருள் செறிந்த - அடர்ந்த சுருட்டை மயிர்கள் கொண்ட; செனியன் - தலையுடையனாக; நஞ்சு வெற்பு உருவுபெற்று - நஞ்சு, மலையின் வடிவைக் கொண்டு; இடை நடந்தது என - அவ்வனத்திடை நடந்தது போல, மாமஞ்சு சுற்றிய வயங்குகிரி - பெரிய மேகம் சூழ்ந்து விளங்கும் மலைகள், (கால்களின் நடை வேகத்தால்); வாத விசையில் - காற்றின் விசையால், பஞ்சு பட்டது பட - பஞ்சடையும் நிலையை அடையும் படி; படியின்மேல் முடுகி -நிலத்தின் மீது விரைந்து நடந்து; ஏ- அசை.

விராதன் நஞ்சுபோல் கொடுமையும் மலைபோல் வலிய தோற்றமும் கொண்டவன். அவன் நடைவேகத்தால் எதிர்ப்படு மலைகள் பஞ்சுபோல் சிதறிப் பறந்தன. தாடகை வருகையையும் இவ்வாறே கிரிகள் பின் தொடர வந்தாள் (368) என்பார். நஞ்சு வெற்புருவு பெற்றிடை நடந்தது என்பது இல்பொருளுவமை. செனியன் - சென்னியன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His head thick with coiled hair bright as red flame,
  2. as though poison had taken a mountain's shape and walked through the forest, while great
  3. cloud-wrapped shining hills, in the wind of his speed,
  4. were scattered like cotton, he rushed across the earth,

What the poem says

Virātaṉ comes on with red, curled hair like flame. He is like poison that has become a walking mountain: cruel as poison, huge and hard as a hill. This is an imagined comparison, since no such thing exists.

So fast does he move that the wind of his passing tears cloud-capped hills apart like cotton. The poet used a similar picture for the coming of Tāṭakai in the first book.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceñ cuṭarc ceṟi mayirc curuḷ ceṟinta ceṉiyaṉ,
nañcu veṟpu uruvu peṟṟu iṭai naṭantateṉa, mā
mañcu cuṟṟiya vayaṅku tiri vāta vicaiyil
pañcu paṭṭatu paṭap paṭiyiṉ mēl muṭukiyē.