கம்பராமாயணம் 2598 · ஆரணிய 1.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புண் துளங்கி அன கண்கள் - புண்கள் துடிப்பது போன்ற கண்களில்; கனல் பொங்க - நெருப்புப் பொறி பறக்க; மழைசூழ் விண் துளங்கிட - மேகம் சூழ்ந்த வானம் நடுங்க; விலங்கல்கள் குலுங்க - மலைகள் நடுங்கிட; வெயிலும் - கதிரவனும்; கண்டு - பார்த்து; உளம் கதிர்குறைந்திட -மனம் ஒளி கெட; நெடுங்கடல் சுலாம்- பெரிய கடல் சூழ்ந்த; மண்துளங்க- நிலம் நடுங்க; வய அந்தகன் - வலிமையுடைய யமனும், மனம் தளர - உள்ளம் தளர்ச்சி அடைய; ஏ- அசை.
கண்ணில் கனல் பொங்குவது புண்ணில் செந்நிறம் விளங்குவதுபோன்றது, வெயில், மழை -ஆகுபெயர். அந்தகன் - உயிர்களுக்கு முடிவை உண்டாக்கும் கண்ணற்றவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- fire flaring from eyes like throbbing wounds, the cloud-hung
- sky trembling, the mountains shaking, the sun itself,
- seeing him, dimming its rays in its heart, the earth girt by the long sea
- quaking, and mighty Death himself losing heart,
What the poem says
The description of Virātaṉ continues. His eyes are red like raw, throbbing wounds and shoot sparks. At his coming the sky shakes, the hills tremble, the sun loses its brightness in fear, the sea-girt earth quakes, and even Yama, the god of death, is dismayed.