கம்பராமாயணம் 2600 · ஆரணிய 1.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
படையொடு ஆடவர்கள் - போர்க் கருவி ஏந்திய வீரர்கள்;பாய் புரவி- தாவிப்பாயும் குதிரைகள்; மால்களிறு - பெரிய மத யானைகள், தேர் - தேர்கள்; நடைய - உலாவும்; வாள் அரிகள்- ஒளியுடைய சிங்கங்கள்; கோள் உழுவை - உயிரைக் கொள்வதைத் தொழிலாகக் கொண்ட புலிகள்; நண்ணிய எலாம் - இவ்வாறு தன்னை அடைந்த யாவற்றையும்; அடைய வாரி - முழுவதும் வாரிக் கொண்டு வந்து, அரவால் முடி- பெரிய பாம்பால் தொகுத்துக்கட்டிய; அனேக வித வன் தொடையல் மாலை - பலவிதமான, வலிதாகத் தொடுக்கப்பட்ட மாலைகள்;துயல்வந்து - தொங்கி அசையும், உலவு தோள் - விசாலமான தோள்கள்; பொலிய- விளங்க, ஏ- அசை.
“படையொடு... தேர்” என நாற்படையும் வந்தன. வாரி என்றதால் எளிமையாக அள்ளி எடுத்தமை புலனாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- armed warriors, leaping horses, great elephants, chariots,
- prowling bright lions, killer tigers, all that came near him
- he swept up whole, and garlands of many kinds, bound with serpents
- and strongly strung, swung and swayed on his broad shoulders, making them splendid.
What the poem says
Virātaṉ has scooped up everything within reach: soldiers, horses, elephants and chariots, the four arms of an army, along with lions and tigers. He has strung them into garlands tied with great snakes and wears them swinging on his shoulders. 'Swept up' shows how effortlessly he gathers them.