கம்பராமாயணம் 2601 · ஆரணிய 1.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குன்று துன்றின என - மலைகள் நெருங்கின போல; ஒன்றின் ஒன்று இடை அடுக்கின - ஒன்றின் மேல் ஒன்றாகத் தன்னிடம் அடுக்கப் பெற்ற; குமுறு கோப மதமா - பிளிறும், சினத்தையுடைய மதயானைகளை, தடக்கை உதவ - தன் பெரிய கைகள் உதவ; பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் - (போகப்போக) பின்னும் செல்கின்ற குகை போன்ற பெரிய வாயிடத்தில்; ஒருபால் மென்றுதின்று - ஒரு பக்கத்தில் (அந்த யானைகளை) மென்று தின்று கொண்டிருக்கும்; விளியாது விரியும் -அடங்காது மேலும் மிகுகின்ற; பசியோடு - பெரும்பசியுடன்; ஏ-ஈற்றசை
“இடை இடுக்கிய” எனக் கொண்டு தன் விரலின் இடையே இடுக்கி வைக்கப் பெற்ற (கை) எனவும் பொருள் கொள்வர். அந்த யானைகள் அவன் வாயில் ஒருபுறத்துக்கே போதா. விளிதல் - கழிதல், நீங்கல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rutting elephants, roaring in rage, crowded like hills,
- stacked one upon another, his great hands helping,
- on one side of his huge mouth, like a cave that runs ever deeper,
- he chewed and ate, with a hunger that never died but only spread.
What the poem says
Virātaṉ eats as he walks. With his hands he feeds into one corner of his cavernous mouth rutting elephants piled up like hills, and still his hunger only grows. One reading takes the elephants as gripped between his fingers. The elephants are not even enough to fill one side of his mouth.