கம்பராமாயணம் 2602 · ஆரணிய 1.11

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பன்ன காதிபர் பணாமணி பறித்து அவை பகுத்து ,
அன்ன வானவர் விமானம் இடையிட்டு , அரவிடைத்
துன்னு கோளினொடு தாரகை தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு தடமார்பினொடும் ஏ .

பொருள் · Meaning in Tamil

பன்னகாதிபர் - பாம்பின் தலைவர்களாம் வாசுகி முதலிய பாம்புகளின்; பணாமணி பறித்து - படங்களிலுள்ள நாகரத்தினங்களைப் பிடுங்கி வந்து; அவை பகுத்து என்ன - அவற்றைப் பிரித்துப் பதித்தாற் போல; அரவிடை - மலைப்பாம்புகளின் உடலிலே; வானவர் விமானம் இடையிட்டு - தேவர்களின் விமானங்களை இடையிடையே தொங்கவிட்டு; துன்னு கோளினொடு - விளங்கும் ஒன்பது கிரகங்களுடனே; தாரகை - விண்மீன்களை; தொடுத்த - கட்டிய; துழனி- ஒலியுடன் கூடிய; சன்னவீரம் - ஒருவகை வெற்றிமாலை; இடைமின்னு - இடையே விளங்கும்; தட மார்பினொடும் - பரந்த மார்புடன்; ஏ- ஈற்றசை.

பன்னகம் - பாம்பு, பன்னகாதிபர்- வாசுகி, அனந்தன், தட்சன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் எனும் எட்டுக்குலநாகங்கள் பணம் - படம், துழனி, ஒன்றோடொன்று மோதி எழும் ஒலி. விராதன் அணிந்த வெற்றிமாலையில் தேவர்களின் விமானம், கிரகங்கள் விண்மீன்கள் ஆகியவை கோக்கப் பெற்றிருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if the jewels torn from the hoods of the serpent kings had been parted and set,
  2. with the sky-cars of the gods hung between, and on the serpents
  3. the close-set planets and the stars strung together, a clattering
  4. victory-garland gleaming on his broad chest;

What the poem says

Virātaṉ's chest bears a monstrous victory-garland. It is made of great snakes, on which are strung the flying chariots of the gods, the nine planets and the stars, so that it seems set with the jewels of the eight serpent kings such as Vācuki. As the pieces knock together it rattles loudly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṉṉakātipar paṇā maṇi paṟittu, avai pakuttu
eṉṉa, vāṉavar vimāṉam iṭaiyiṭṭu, araviṭait
tuṉṉu kōḷiṉoṭu tārakai toṭutta tuḻaṉic
caṉṉavīram iṭai miṉṉu taṭa mārpiṉoṭumē.