கம்பராமாயணம் 2603 · ஆரணிய 1.12

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரியக்
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து , ஒளி குலா
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை , எயிறு உண்
கிம்புரிப் பெரிய தோள் வளையொடும் கிளரவே .

பொருள் · Meaning in Tamil

பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர்- பரவிய செவ்வானத்தையும் தீயையும் போன்ற செம்மயிர்; பக்கம் எரிய - பக்கங்களில் விளங்க, கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து - குடம் போன்ற மத்தகங்கள் உயர்ந்த நெற்றியில் கட்டப் பெற்ற; ஒளி குலாம் உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை - ஒளி வீசும் தேவர்கட்கு அரசனான இந்திரனின் பெரிய ஐராவதம் எனும் யானையின் நெற்றிப்பட்டம்; எயிறு ஒண் - அந்த யானையின் தந்தங்களில் பூட்டிய ஒளி மிக்க; கிம் புரி- பூண்கள்; பெரிய தோள் வளையொடும் - பெரிய வாகுவலயத்துடன்; கிளர- விளங்க; ஏ -ஈற்றசை.

செம்பட்டை மயிர் உடற்புறத்தே தொங்கிய விராதனுக்கு ஐராவதத்தின் ஓடை நெற்றிப்பட்டமாகவும், கிம்புரி வாகுவலயமும் ஆயின, பம்புதல் - பரத்தல், உற்ற - உவமஉருபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. his red hair, like spreading sunset fire, blazing at his sides;
  2. bound on his high forehead, taken from the domed brow, the radiant
  3. frontlet of the great elephant of the king of the gods; and the bright tusk-
  4. rings worn as great armlets on his shoulders, gleaming;

What the poem says

The catalogue of Virātaṉ's terrible finery goes on. His red hair hangs about him like sunset or fire. On his forehead he wears the face-plate stripped from Airāvatam, the elephant of Intiraṉ, king of the gods, and as armlets he wears the metal rings that capped its tusks. The demon has plundered heaven itself for his ornaments.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pampu cekkar eri okkum mayir pakkam eriya
kumpam uṟṟa uyar neṟṟiyiṉ vicittu, oḷikulām
umparukku aracaṉ māl kariyiṉ ōṭai, eyiṟu oṇ
kimpurip periya tōḷ vaḷaiyoṭum kiḷaravē.