கம்பராமாயணம் 2605 · ஆரணிய 1.14

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச்
சுற்றி , வாரண உரித் தொகுதி நீவி தொடரக்
கொற்றம் மேவு திசை யானையின் மணிக்குலம் உடைக்
கற்றை மாசுணம் உரித்த உரி கச்சு ஒளிரவே .

பொருள் · Meaning in Tamil

செற்ற - (தான்) கொன்ற; வாள் உழுவை வன் செறி அதள் - கொடிய புலியின் வலிய நெருங்கிய தோல்; திருகுற - (தன் மார்பில்) சுருண்டு விளங்க; சுற்றி - சுற்றி உடுத்துக்கொண்டு; வாரண உரித் தொகுதி - பல யானைகளின் தோற்கூட்டம்; நீவி தொடர -அரையில் கட்டிய ஆடையாகத் தொடர்ந்திருக்க; கொற்றம் மேவு திசை யானையின்- வெற்றி பொருந்திய எட்டுத்திக்கு யானைகளின்; மணிக்குலம் உடை - மணிக்கூட்டங்களை உடைய கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு - பெரிய மலைப்பாம்பை விரித்து இழுத்துக்கட்டிய இடைக்கச்சு; ஒளிர - விளங்க; ஏ- ஈற்றசை.

விராதன் கொன்ற புலியின் தோல் அவனுக்கு மேலாடையாகவும், யானைத் தோல் அரையில் கட்டும் ஆடையாகவும், திசையானைகளின் மணிகளைக் கோத்த மலைப்பாம்பு கச்சாகவும் விளங்கின. நீவி - ஆடை, கொய்சகமும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. the strong, close-haired hide of a fierce tiger he had killed wound twisting about him,
  2. a mass of flayed elephant skins trailing as his lower cloth,
  3. and, hung with clusters of bells from the victorious elephants of the quarters,
  4. a great python stretched out as a striped girdle, gleaming;

What the poem says

Virātaṉ's clothing is made from his kills. A tiger's skin is wrapped about his upper body and the hides of elephants form his lower garment. His waistband is a huge python, on which hang the bells of the elephants that guard the eight directions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ceṟṟa vāḷ uḻuvai vaṉ ceṟi ataḷ tirukuṟac
cuṟṟi, vāraṇa urit tokuti nīvi toṭara
koṟṟam mēvu ticai yāṉaiyiṉ maṇik kulamuṭaik
kaṟṟai mācuṇam virittu vari kaccu oḷiravē.