கம்பராமாயணம் 2606 · ஆரணிய 1.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செங்கண் அங்க அரவின்- சிவந்த கண்களையும் (நீண்ட) உடலையும் உடைய பாம்புகளுடைய; பொரு இல்- ஒப்பில்லாத; செம்மணி விராய் - சிவந்த மாணிக்கங்கள் கலந்து அமைக்கப்பட்டு; வெங்கண் அங்க வலயங்களும் - கொடிய தன்மை உடைய உறுப்புகளில் அணியும் தோள் வளைகளும்; இலங்க - விளங்கி அசைய, விரவி - பொருந்தி; சங்கு அணங்கிய சலஞ்சலம் - சங்குகள் வருந்திப் பெற்ற சலஞ்சலம் என்னும் உயர்ந்த சங்குகளால்; அலம்பு - ஒலிக்கின்ற, தவளக் கங்கணங்களும் - வெண்ணிறக் கைவளைகளும்; இலங்கிய கரம் பிறழவே -விளங்கும் கைகளில் விளங்கவும்; ஏ- ஈற்றசை
பாம்பின் மணிகளால் இயன்ற வலயங்களோடு முத்துக்கங்கணமும் விராதன் அணிந்துள்ளான். சலஞ்சலம் - வலம்புரி ஆயிரம் சூழ்ந்த ஓர் உயர்ந்த சங்கு. (49).
ஆங்கிலம் · English translationAI
Translation
- armlets set with matchless red jewels from red-eyed, long-bodied serpents
- shining on his cruel limbs, and with them
- white bracelets of calañcalam conch, which conches labour to bring forth, clinking
- on his gleaming arms, flashing;
What the poem says
On his arms Virātaṉ wears bands set with the red gems said to lie in serpents' hoods, and white bracelets of calañcalam shell. The calañcalam is the rarest of conches, said to be encircled by a thousand right-whorled conches, and only born to them with great pain.