கம்பராமாயணம் 2607 · ஆரணிய 1.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முந்து வெள்ளிமலை பொன்னின் மலையோடு முரண -சிறந்த கைலை மலையும், மேருமலையோடு மாறுபடும்படி; பந்து முந்து கழல் பாடுபட - பந்தாக முன்னே தள்ளும் கால்களால் அவதியுற; ஊடு படர்வோன் - அம்மலைகளின் இடையே நடந்து செல்வான்; வந்து மண்ணினிடை யோன் எனினும் - வந்து உலகின் இடையே உள்ளான் என்றாலும்; வானினிடையோர் சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் - தேவர்களின் மனத்திலும் கண்ணிலும் உள்ளவன் என்று கூறப்படும் வலிமையுடையவனும்,
கைலை மலையையும் மேருமலையையும் பந்துபோல் ஆடவல்ல வலிய பெரிய தாள்களால் அக் காட்டில் செல்பவன் விராதன் ஆவான். அவனிடத்துக்கொண்ட அச்சத்தால் தேவர் சிந்தையுளும் விழியிலும் உளன் என்றார் சிவனுறையும் மலை கைலை என்பதால் முந்து வெள்ளிமலை என்றார் வான் - சுவர்க்கத்திற்கு இலக்கணை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He went striding through, so that the foremost Silver Mountain clashed with the Golden Mountain,
- as his feet kicked them ahead like balls and battered them;
- and though he had come and lived on the earth, those who dwell in heaven
- held him ever in their minds and before their eyes, so great was his might.
What the poem says
Virātaṉ's legs are so strong that he could kick Kailāsam, the Silver Mountain where Civaṉ dwells, and golden Mēru about like balls. Though he lives on earth, the gods in heaven never stop thinking of him and seeing him in their minds' eye, out of fear.