கம்பராமாயணம் 2608 · ஆரணிய 1.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு - ஐந்து பூதங்களும் ஓர் உருவம் எடுத்துக்கொண்டு; புதிது என்று ஓத ஒத்த உருவத்தன் - புதுமையான ஒரு வடிவு எடுத்து இவ்வாறு வந்தன என்று சொல்லத் தக்க வடிவுடையவனும்; உரும் ஒத்த குரலன் - இடி ஓசையைப் போன்ற குரலோசை உடையவனும், அயன் காதலித்து அளித்த கடையிட்ட பாத கணித லக்கம் - பிரமன் மகிழ்ந்து கொடுத்த கடையிலே கணக்கிட்டு வைத்த கால் இலட்சம்; மதவெற்பு அவை படைத்த வலியான் - மதயானைகளாம் அவ்விலங்குகள் அடைந்த வலிமையை உடையவன்.
விராதனின் வலிய உருவமும் கொடிய குரலும் கூறப்பட்டுள்ளன. கடையிட்ட பாதலக்கம் ஒன்றேகால் இலட்சம். வெற்பு - ஆகுபெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'All the elements have taken a single form, a new thing!' So one
- might say of his body; his voice was like thunder;
- lovingly granted him by Ayaṉ, reckoned at a hundred thousand
- and a quarter more, the strength of rutting mountain-like elephants was his.
What the poem says
Virātaṉ's body looks as if all five elements had combined into one new creature, and his voice is thunder. By a boon of Ayaṉ, the creator Piramaṉ, he has the strength of one hundred and twenty-five thousand rutting elephants.