கம்பராமாயணம் 2609 · ஆரணிய 1.18

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விராதன் எனும் அக்கோர வெங்கண் உரும் ஏறு அன கொடுந் தொழிலினான் - விராதன் என்று சொல்லப்படும் அந்த அச்சமூட்டும் கொடிய கண்களையும் பேரிடி போன்ற கொடிய தொழிலையுமுடையவன்; (வரும் வேகத்தால்); மரங்கள் தரையில் பேர - மரங்கள் நிலத்தில் நின்ற இடம் விட்டுப் பெயர்ந்து விழவும்; வன்கிரி பிளந்து உக - வலியமலைகள் பிளவுண்டு சிதறவும்; வளர்ந்து இகல் பெறா வீர வெஞ்சிலையினோர் எதிர் சார வந்து அயல் விலங்கினன் - பேருருக்கொண்டு வளர்ந்து போரைப் பெறாத வீரமும் கொடிய வில்லும் உடைய இராமலக்குவர் முன்னே அருகில் வந்து எதிராகக் குறுக்கிட்டு நின்றான்.

விலங்கினன் - குறுக்கிட்டான். விராதன் - எதிலும் நிறைவு பெறாதவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He came close and stood across their path; trees were wrenched
  2. from the ground, hard hills split and scattered; swelling huge, before the heroes
  3. of fierce bows who had found no foe to fight, he who is called Virātaṉ,
  4. terrible, cruel-eyed, of deeds as cruel as the thunderbolt.

What the poem says

The long description ends as Virātaṉ arrives. Trees are torn up and hills split by the force of his coming, and growing to an enormous size he blocks the way of Irāmaṉ and Ilakkuvaṉ, warriors whose bows have so far found no worthy fight in the forest. The name Virātaṉ is explained as 'one never satisfied'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cāra vantu, ayal vilaṅkiṉaṉ; maraṅkaḷ taraiyil
pēra, vaṉ kiri piḷantu uka, vaḷarntu, ikal peṟā
vīra veñ cilaiyiṉōr etir virātaṉ eṉum ak
kōra veṅ kaṇ urum ēṟu aṉa koṭun toḻiliṉāṉ.