கம்பராமாயணம் 2610 · ஆரணிய 1.19

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ''
பாட வேறுபாடு · Project Madurai reads
1''நில்லும் , நில்லும் '' என வந்து , நிணம் உண்ட நெடு வெண்
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து ,
அல்லி புல்லும் மலர் அன்னம் அனையாளை ஒரு கைச்
சொல்லும் எல்லையின் முகந்து , உயர் விசும்பு தொடர .

பொருள் · Meaning in Tamil

நிணம் உண்ட நெடுவெண் பல்லும் வல் எயிறும் - தசையைப் புசித்த நீண்ட வெண்ணிறப் பற்களும் வலிய கோரப்பற்களும்; மின்னு பகுவாய் முழை திறந்து - விளங்கும் பிளந்த வாயாகிய குகையைத் திறந்து; “நில்லும் நில்லும்” எனச் சொல்லும் எல்லையில் - 'நில்லுங்கள், நில்லுங்கள்' என்று சொன்ன அளவில்; அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை - அகவிதழ்கள் நெருங்கிய தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னப் பறவை போன்ற சீதையை; வந்து ஒருகை முகந்து உயர்விசும்பு தொடர - எதிர் வந்து ஒருகையால் எடுத்து உயர்ந்த வானத்தில் தொடர்ந்து செல்ல;

எயிறு - பல்லின் விளிம்பும் ஆம். நில்லும் நில்லும் - அடுக்கு. அன்னம் -ஆகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Stop! Stop!' he cried, coming on, and opening the cave of his gaping mouth, where long white
  2. teeth that had eaten flesh and strong fangs flashed,
  3. he scooped up in one hand her who was like a swan on a flower thick with inner petals,
  4. in the time it took to say it, and went up into the high sky.

What the poem says

Shouting 'Stop, stop!', Virātaṉ opens his cave of a mouth, full of teeth that have fed on flesh, and in the moment it takes to say the words he snatches up Cītai in one hand and rises into the sky. She is compared to a swan seated on a lotus.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1''nillum, nillum '' eṉa vantu, niṇam uṇṭa neṭu veṇ
pallum val eyiṟum miṉṉu paku vāy muḻai tiṟantu,
alli pullum alar aṉṉam aṉaiyāḷai oru kai
collum ellaiyil mukantu, uyar vicumpu toṭara.