கம்பராமாயணம் 2614 · ஆரணிய 1.23

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுமேக உருவன் இலை கொள் வேல் அடல் இராமன் -மேல் எழுகின்ற நீருண்டது போன்ற மேகத்தின் நீல நிறமுடையவனாகிய அரசிலை போன்ற நுனியுடைய வேலேந்திய வலிய இராமன்; சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலிஏறு - வில்லிற் கொண்ட நீண்ட கயிற்றின் மிக்க ஒலியானது; திரைநீர் மலைகள் நீடுதலம் நாகர் பிலம் வானம்முதலாம் உலகம் ஏழும் - அலைகள் கூடிய கடலின் நீரும் மலைகளும் சூழ்ந்த நீண்ட நிலவுலகமும் நாகர் வாழும் பாதலமும் சுவர்க்க லோகமும் முதலாகிய ஏழு உலகங்களும்; உரும் ஏறு என ஒலித்து உரற - பேரிடி ஏறு போலப் பெருமுழக்கம் உண்டாக்க; ஏ- ஈற்றசை

இராமன் எறிந்த வில்லின் நாணொலி ஏழு உலகங்களிலும் இடி ஏறு போல ஒலித்தது. வேல்படைகொண்டு போவதும் தமிழ் மரபு பற்றிக் கூறி ஏனைப் படைகளையும் பெறவைத்தார் மேல் உலகம் ஏழாவன: பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தபோலோகம், சத்தியலோகம். கீழேழு உலகம். அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதாளம். உரற - எதிரொலிக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Irāmaṉ, mighty, bearing a leaf-bladed spear, of the hue of a rising rain-cloud:
  2. the swelling roar of the long cord held on his bow made the wave-tossed waters,
  3. the wide land with its mountains, the cavern-world of the Nākars, the heavens and the rest,
  4. all the seven worlds, ring and roar as if with the thunderbolt.

What the poem says

The twang of Irāmaṉ's bowstring echoes like thunder through all seven worlds, from the sea and the mountain-filled earth down to the serpents' underworld and up to heaven. The commentary lists both the seven upper and seven lower worlds of Purāṇic cosmology.

Irāmaṉ is described as dark as a rain-cloud and armed with a leaf-shaped spear; naming one weapon, in the Tamil manner, implies the rest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ilai koḷ vēl aṭal irāmaṉ, eḻumēka uruvaṉ,
cilai koḷ nāṇ neṭiya kōtai oli ēṟu, tirai nīr
malaikaḷ nīṭu talam, nākar pilam, vāṉam mutal ām
ulakam ēḻum urum ēṟu eṉa olittu uraṟavē.