கம்பராமாயணம் 2615 · ஆரணிய 1.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கன் - அவ்விராதன்; வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் - வஞ்சத்தன்மையுடைய கொடிய பூனையின் பெரிய வாயிலே; மறுகும் பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா - அகப்பட்டுத் தவிக்கும் கூட்டிலுள்ள கிளி போலக் கூச்சலிடும் சீதையைக் கீழே விட்டு; நெஞ்சு உளுக்கினன் என - மனஞ்சிதைந்தவன் போல, சிறிது நின்று நினையா - சற்றே நின்று சிந்தித்து; அஞ்சனக் கிரி அனான் எதிர் அழலா - கரியமலை போன்ற இராமனுக்கு எதிரில் வந்து கோபித்து;
பூசை - பூனை (4). பாவை - ஆகுபெயர் அஞ்சனம் - கருமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a caged parrot struggling in the long mouth of a cruel, treacherous cat
- she cried out; letting go of the doll-like lady,
- as if his heart were shaken, he stood a little while and thought,
- and the demon blazed up against him who was like a mountain of collyrium.
What the poem says
Cītai screams in the demon's grip like a parrot in a cat's jaws. Shaken for a moment by the bowstring's sound, Virātaṉ sets her down, pauses to think, and then turns in rage on Irāmaṉ, who is dark as a hill of collyrium.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vañcakak koṭiya pūcai neṭu vāyil maṟukum
pañcarak kiḷi eṉak kataṟu pāvaiyai viṭā,
neñcu uḷukkiṉaṉ eṇa ciṟitu niṉṟu niṉaiyā,
añcaṉak kiri aṉāṉ etir arakkaṉ aḻalā.