கம்பராமாயணம் 2616 · ஆரணிய 1.25

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பேய்முகப்பிணி அற - பேய்களிடத்திலுள்ள பசியாகிய நோய் நீங்க; பகைஞர் உதிரம் - எதிரிகளின் இரத்தத்திலே; பெட்பின் தோய் முகத்தது - விருப்பத்தோடு தோய்ந்த நுனியை உடையதும்; கனத்தது - வலிமையுடையதும், சுடர்க் குதிரையின் - தீச்சுடர் விட்டெரியும் குதிரை உருவில்; வாய்முகத்திடை நிமிர்ந்து - வாயும் முகமும் தன்னிடம் கொண்டு மேலோங்கி; வடவேலை பருகும் - வடதிசையிலுள்ள கடல் நீரைப் பருகும்; தீமுகத் திரிசிகைப் படை திரித்தெரிய - தீயைத் தன்னிடம் கொண்டதும் ஆன முப்பிரிவான சூலத்தைச் சுற்றி இராமன் மீது எறிய; ஏ-ஈற்றசை.

விராதனின் சூலப்படை இரத்தம் தோய்ந்திருந்ததால் பேய்கள் அதைக் குடித்துப் பசிதீர்ந்தன. என்றும் பசிநீங்காப் பேயும் பசி தீர அவன் பகைவரை அழித்துக் கொண்டே இருந்தான் என்பதாம். வடவைத் தீ என்பது வடகடலில் பெண்குதிரை வடிவில் உள்ள தீ எனப் புராணங்கள் கூறும். அத்தீயே மூன்று நாவுடன் உள்ளது போல விராதனின் படை விளங்கியது. வடகுதிரை எனப் 'படபை' என்ற பெண் குதிரையைச் சுட்டும் என்பர். திரிசிகைப் படை -முத்தலைச்சூலம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To end the hunger-sickness of the ghouls, eagerly in the blood of foes
  2. its point had been steeped; heavy it was; like the fire that from the blazing mare's
  3. mouth and face rears up and drinks the northern ocean,
  4. he whirled that fire-tipped, three-pronged weapon and hurled it.

What the poem says

Virātaṉ spins his trident and throws it at Irāmaṉ. Its points are always wet with the blood of enemies, on which ever-hungry ghouls feed. Its three flames are likened to the submarine fire which, the Purāṇas say, lives in the northern ocean in the form of a mare and drinks up its waters.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēymukap piṇi aṟap pakaiñar peṭpiṉ utiram
tōy mukattatu, kaṉattatu, cuṭark kutiraiyiṉ
vāymukattiṭai nimirntu vaṭa vēlai parukum
tī mukat tiri cikaip paṭai tirittu eṟiyavē.