கம்பராமாயணம் 2617 · ஆரணிய 1.26

Section ஆரணிய காண்டம் / 1. விராதன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்ன அயில் - அந்தச் சூலப்படை; திசையும் - எண் திசைகளும், வானவரும் - அவ்வெட்டுத்திசைக்காவல் செய் தேவரும், திசைநின்ற மாவும் - அத்திக்குகளில் நின்ற எட்டுயானைகளும்; உலகும் - உலகங்களும்; அசையும் - கலங்கக் காரணமான; ஆலம் என- ஒருநஞ்சென; மின்னிவரலும் - ஒளிவீசி வரவும்; இராமன், வசையில் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் - குற்றமில்லாத மேரு முதலாக உள்ள மலைகள் ஏழை விட வலிமைமிக்க; விசைய வார்சிலை -வெற்றித் தரும் நீண்ட வில்லிலிருந்து; ஒருவாளி விட - ஓரம்பைத் தொடுத்து எய்ய; ஏ- ஈற்றசை.

திசையும் வானவரும் என்பதற்குத் திகைக்கும் தேவரும் எனவும் பொருள்படும். எ.டு. 'நீதிசைத்தது உண்டோ' (1512) திசைவானவர் - இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு குபேரன், ஈசானன் என எண்மர். எட்டுத்திக்கு யானைகள் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபௌமம், சுப்பிரதீபம் என்பன. மா- விலங்கின் பொதுப் பெயர் ஏழுமலைகளாவன: கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி என்பன. விசயம் என்பது விசையம் என எதுகை நோக்கித் திரிந்தது எனலாம். விசைய என்பதற்கு வேகமாக எனவும் பொருள் கூறுவர் ஒரு - ஒப்பற்ற எனவுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The quarters, the gods, the elephants that stand at the quarters, the worlds
  2. all shook as at the deadly poison, as that spear came flashing on;
  3. then, with his long bow of victory, stronger than the seven great mountains led by flawless Mēru,
  4. Irāmaṉ let fly a single arrow.

What the poem says

The trident comes on like the poison that once rose from the churned ocean, making the eight directions, their guardian gods, their elephants and the worlds tremble. Irāmaṉ answers with a single arrow from a bow mightier than the seven great mountains. The commentary lists the eight guardians of the directions and their eight elephants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ticaiyum, vāṉavarum, niṉṟa ticai māvum, ulakum
acaiyum ālam eṉa, aṉṉa ayil miṉṉi varalum,
vacai il mēru mutal māl varaikaḷ ēḻiṉ vali cāl
vicaiya vār cilai irāmaṉ oru vāḷi viṭavē.