கம்பராமாயணம் 2618 · ஆரணிய 1.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவ்வரக்கர் குலம் இன்றொடு இற்றது - இந்த இராக்கதக் கூட்டம் இந்த நாளோடு முடிந்தது; என்று - எனக் குறிபார்த்து; பகலே வெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல் -பகற்காலத்திலே மேகமற்ற வெறும் வானத்திலிருந்து பெரிய விண்மீன்கள் வீழ்வன போல; சுற்று அமைந்த சுடர் எஃகம் அது - சுற்றிலும் பொருந்திய ஒளியுடைய சூலம்; இரண்டு துணியா - இரண்டு துண்டாக்கப்பட்டு; அற்ற கண்டம் அவை - அழிந்த அத்துண்டங்கள்; ஆசையினது அந்தம் உற - திக்குகளின் எல்லையை அடைய, ஏ- ஈற்றசை வெற்ற விண் - வேறு ஒன்றும் இல்லாத சூனியமான ஆகாயம். பகலில் விண்மீன்கள் விழுவது கேட்டின் அறிகுறி. சூலத்தின் துண்டுகள் வானில் விண்மீன்களாக விழுந்த நிலை அரக்கர் அழிவுக்கு அறிகுறியாம். ஆசை - திக்கு. எ- டு ஆசை பத்திற்கும் (3422) அது, அவை என்பன பகுதிப் பொருள்விகுதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As though declaring, 'With today the race of these demons is ended,' as by day
- great stars come falling from the empty sky,
- that bright spear, well wrought all round, was cut in two,
- and the severed pieces flew off to the ends of the quarters.
What the poem says
Irāmaṉ's arrow splits the trident in two, and the halves fly off to the ends of the earth. The poet likens them to great stars falling from a clear sky in daylight, a traditional omen of disaster; here it foretells the destruction of the whole demon race.