கம்பராமாயணம் 2619 · ஆரணிய 1.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நிருதன் - அவ்வரக்கன்; சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு - கொடுமை தங்கியுள்ள தன் சூலம் துண்டுபட்டு அழிந்ததைப் பார்த்தும்; சிறிதும் போர் ஒடுங்கிலன் - போர் செய்தலிற் சற்றும் தளர்ச்சி இல்லாதவன் ஆகி; மறம்கொடு - வீரப்பண்பை மேற் கொண்டு; புழுங்கி - கோபத்தால் மனம் வெதும்பி; பார் ஒடுங்குறுகரம் கொடு - நிலவுலகு ஒடுக்கமுறும்படியான தன் பெரிய கைகளால், பருப்பதம் எலாம் - மலைகளை எல்லாம்; வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் - வேரோடு விரைவாகப் பிடுங்கி எடுத்து இராமனுக்கு எதிராக வேகமாக எறிந்ததும்.
தன் சூலப்படை இராமன் அம்பால் துண்டுபடினும் பின் வாங்காமல் போர் புரிந்தான் சூர் என்பதற்குத் தேவர், வஞ்சம், கொடுந் தெய்வம் எனப்பல பொருள் கூறுவர் பருப்பதம் -பர்வதம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing his spear, home of cruelty, cut through and broken, not in the least
- did the demon shrink from battle; seething with fury,
- with hands that could crush the earth, the mountains, every one,
- he swiftly tore up by the roots and hurled them at him.
What the poem says
Even with his trident broken by Irāmaṉ's arrow, Virātaṉ does not give up the fight. Burning with anger, he uproots whole mountains with his enormous hands and flings them at Irāmaṉ.